மன இறுக்கம் ஆபத்தானது

குழந்தைகளின் மனநல பிரச்சினைகளை அலட்சியபடுத்தாமல் முறையாகக் கவனிக்க வேண்டும் டான் ஸ்ரீ லீ லாம் தை கூறியிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளில் மன ஆரோக்கியம் குறித்து தீவிரமான கலந்துரையாடல்கள் நடந்தாலும், அவர்களில் பெரும்பாலோர் வயது வந்தோரின் மன நலனில் கவனம் செலுத்தியிருக்கின்றனர்.

மன நோய் நலமான் வாழ்க்கைக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்வது நல்லது.  ஆதலால் பெரியவர்கள் குழந்தைகள் இருதரப்பின் மன ஆரோக்கிய முக்கியத்துவத்திற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டிய நேரம் இது.

தேசிய சுகாதார, நோயுற்ற கணக்கெடுப்பு 2019 இன் படி, மொத்தம் 424,000 குழந்தைகள் மனநலப் பிரச்சினைகளுடன் போராடி வருவது கண்டறியப்பட்டது.  இது, அனைவருக்கும் மிகுந்த கவலைதரும் செய்தியாகவும் உள்ளது,

மேலும் குழந்தைகள் எதிர்காலமே முழுமையான நம்பிக்கை என்பதால் இந்தப் பிரச்சினையைச் சரியாக அணுக வேண்டும் என்று அவர்  ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஆரம்பகால தலையீடு அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்த வழிவகுக்கும் என்பதால் ஒரு குழந்தைக்கு உதவி தேவை என்பதை அங்கீகரிக்கும் திறன் மிக முக்கியமானது. சரியான கவனிப்பு, சிகிச்சையுடன், பெரும்பாலான மனநல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப்படவேண்டியது அவசியம் என்றும் லீ கூறினார்.

அன்பும் கவனிப்பும் நிறைந்த ஓர் உகந்த சூழலை வீட்டிலேயே வழங்குவது உட்பட, குழந்தைகளின் மன நலனை உறுதி செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பங்கை வகிக்க வேண்டும் .

கடினமான, சங்கடமான உணர்வுகள் உட்பட அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கும், எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். குழந்தையின் மன ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவதை உதவுன் நாடுவது முக்கியம். உதவிக்குச் செல்லுங்கள், மனநல மருத்துவர் அல்லது ஆலோசகர் போன்ற ஒரு நிபுணரிடம் பேசுங்கள் என்று அவர் கூறினார், இதற்கு 24 மணி நேர உதவி எண்  03-7627 2929 என்ற எண்ணில் அழைக்கலாம்.

பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்த கூறுகளை இணைப்பதன் மூலம் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவ முடியும், அதே நேரத்தில் கற்பித்தலில் குழந்தையின் மன ஆரோக்கியத்தைக்  கடுமையாகப் பாதிக்கும்.

குழந்தைகள் தங்கள் வளர்ப்பில் பல புதிய மாற்றங்களைச் சந்திக்கிறார்கள், அதாவது ஒரு புதிய பள்ளிக்குச் செல்வது, புதிய நண்பர்களைச் சந்திப்பது, இவை அனைத்தும் அவர்களுக்கு மன அழுத்தத்தை அல்லது கவலையை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார், மேலும் மன உளைச்சலின் அறிகுறிகள் ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வது தடுப்பு முயற்சிகளில் பங்காகவும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here