நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ஆலயங்களில் திருமணம் நடத்த மாநில அரசாங்கம் நேற்றைய மாநில அரசு ஆடசிக்குழு கூட்டத்தில் அனுமதி அளித்துள்ளது என அதன் மாநில இஸ்லாமியர் அல்லாதவர் விவகாரத் துறை தலைவர் அருள்குமார் ஜம்புநாதன் இங்கு செய்தியாளர் கூட்டத்தில் அவ்வாறு கூறினார்.
மேலும் அத்திருமணத்தில் இரு வீட்டார் சார்பாக மொத்தம் 20 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வேளை அரசாங்கம் உத்தரவிட்டுள்ள எஸ்ஓபியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இங்குள்ள ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்கு நேற்று பகல் 2.30 மணியளவுக்கு வருகையளித்த அவர், ஆலயத்திற்கு இறை வழிப்பாடு மேற்கொள்ள வருகை தரும் பக்தர்களுக்கு, ஆலய நிர்வாகம் வகுத்துள்ள எஸ்ஒபி எனும் நிரந்தர செயல் நடவடிக்கைகள் முறைகள் குறித்து நேரடியாக முன்னதாக பார்வையிட்டார்.
அதற்கான விரிவான விளக்கதை ஆலயத் தலைவர் எம்.ராமசந்திரன் மற்றும் செயலாளர் சரவணன் ஆகிய இருவரும் அருள்குமாருக்கு வழங்கினார்கள். இதனிடையே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர், நேற்று முன் தினம் தொடங்கி நெகிரி மாநிலத்தில் பதிவுப்பெற்ற 70 ஆலயங்கள் உட்பட மொத்தம் 162 இஸ்லாமியர் அல்லாதவர் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். மேலும் ஒவ்வொரு ஆலய இறை வழிப்பாட்டிலும் 30 முதல் 40 பேர் வரை மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
-நாகேந்திரன் வேலாயுதம்