பூனைக்கு மரியாதை

பயபக்தி என்பார்கள். இறைவன் முன் பயபக்தியுடன் இருப்பதும் வணங்குவதும் உயர் பண்பாக இருந்துவருகிறது. ஆனாலும், கொரோனாவைக்கண்டு அஞ்சாதவர்கள் கிடையாது. உலகமே நடுங்கிக்கொண்டிருக்கிறது.

நோய்த் தொற்றைக் குறைக்க போராடிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் பல ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாய் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் பயன்பாட்டிற்கு வர ஓராண்டுக்கும் கூடுதலாக ஆகும் என்கிறார்கள்.

ஆனாலும், இத்தொற்றின் பாதிப்பை மருந்தே இல்லாமல் தூரத்தே வைக்க முடியும் என்று சாதராண மனிதன் கூறியிருக்கிறான். எப்படி?

ஒவ்வொரு மனிதரும் இதைச்செய்ய முடியும். மருந்து நம்மிடமே இருக்கிறது. அது, மக்கள் கூடல் இடவெளி மட்டும்தான். இதைக்கடைப்படிக்காத மக்களுக்குத்தான் தொற்று பற்றிக்கொள்கிறது.

செவென் லெவன் விற்பனை மையத்தின் பூனை ஒன்று மக்கள் கூடல் இடைவெளியைக் கடைப்பிடிக்காத  மக்களுக்கு இடைவெளியின் அவசியத்தை அறிவுறுத்திக்கொண்டிருக்கிறது.

முகக்கவசம் இல்லாதவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்று எச்சரித்து ஓய்ந்துவிட்டது. ஆனலும் யாரும் வந்தால் தலையைத் தூக்கிப்பார்க்கிறது. அந்தப் பார்வையைப் புரிந்துகொண்டு மக்கள் முகக்கவசம் அணிந்தே உள்ளே செல்கிறார்கள்.

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வருமாம். அது இதுதானோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here