உணவு வியாபாரம் சுருங்கி விட்டது

கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன்னர் உணவு வாகனங்களுக்கு  ஆதரவளிக்கும் பெரிய மதிய உணவுக் கூட்டம் கணிசமாகக்  குறைந்துவிட்டது.

அவர்களில் பெரும்பாலோர் இப்போது தினமும் காலையில் வேலைக்குச் செல்லும்போது வீட்டிலிருந்தே உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வருகிறார்கள் என்று ஹமீதா சாலே கூறுகிறார்.

இதன் விளைவாக, காப்பிக் கடைகள் , ஸ்டால்களுக்கு பிரபலமான மாற்றாக நிரூபிக்கப்பட்ட உணவு வாகனங்களின்  வணிகம்  குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பலர் தங்கள் சம்பளம் குறைக்கப்படுவதைக் கண்டிருக்கிறார்கள்.  செலவுகளைக் குறைக்க தங்களால் முடிந்த அனைத்திலும் செலவைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள் .

அதிகமான மக்கள் வேலைக்குத் திரும்பிய போதிலும் வர்த்தகம் சுமார் 55 விழுக்காடு குறைந்துள்ளது என்று ஹமீதா கூறினார்.

மே மாத நடுப்பகுதியில் உணவு வாகனங்கள்  மீண்டும் வணிகத்தைத் தொடங்க அனுமதிக்கப்பட்டன, ஆனால், அது இன்னும் பழைய நிலைக்குத்திரும்பவில்லை

முகமூடிகள்,  கையுறைகள் போடுவது போன்ற நிலையான இயக்க முறைகளை அவர்களும் உதவியாளர்களும் பின்பற்றுவதாக  ஹமீதா கூறினார்.

ஆனாலும், வாடிக்கையாளர்கள் குறைவாகவே உள்ளனர் . ஒரு நாளைக்கு 60 முதல் 70 பாக்கெட் அரிசி உணவுகளை விற்கமுடிந்தது, ஆனால், இப்போது 40 க்கு மேல் விற்க முடிந்தால், அதை ஒரு நல்ல நாளாக நான் கருதுவேன் என்று ஒருவர் கூறுகிறார். அவர், விலைகளை உயர்த்தவில்லை ஆனால், மக்கள் செலவு செய்ய முன்வரவில்லை.

தேநீர் விற்கும் ஜாபாருடின் ஹாரிஸ் என்பவர், அவரது மனைவி, இருவரும் அதே எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தும் குறைவாகவே மக்கள் செலவிடுகிறார்கள் என்கிறார்.

வாடிக்கையாளர்கள் அதிகம் செலவு செய்வதை விரும்பவில்லை.. அதனால் வியாபாரமும் பாதியாக குறைந்துவிட்டது என்கிறார் ஜாபாருடின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here