சுழியம் என்பதே எல்லை! பிறகு இல்லை தொல்லை!

மீட்சியுறும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை வெகுவாகப் பின்பற்றப்படுவதால் அடுத்தமாத மத்தியில் கொரோனா சுழியம் விழுக்காட்டிற்கு வந்துவிடும் என்று பொதுவாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.

சுகாதார அமைச்சு கையாளும் தொடர் நடவடிக்கைகளால் இது சாத்தியப்படும் அறிகுறியை கொண்டிருக்கிறது என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ நூர் இஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

மிகக்குறைந்த எண்ணிக்கைக்கு தொற்று வந்திருப்பதால் வழக்க இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியிருக்கிறார்கள். இது, புதிய சூழலுக்கு மக்கள்  மாறியிருப்பதைக் காட்டுவதாக அவர் கூறினார்.

அனைத்திற்கும் மக்களின் புரிந்துணர்வும் ஒத்துழைப்புமே காரணம். இது தொடர்ந்தால் வெகு விரைவில் தொற்று இல்லாத மலேசியத்தைக் காணமுடியும் என்ற நம்பிக்கையில் அவர் வலுவாக இருக்கிறார்.

இபோதெல்லாம் கோரோனாவோடு வாழப் பழகிக்கொள்ளவேண்டும் என்கிறார்கள். இதிலிருந்தே கொரோனா இன்னும் நம்மோடு வாழ்கிறது என்பதாகத்தானெ அர்த்தம். இது பிரச்சினை அல்ல. கோரொனாவை தூரத்தில் வைப்பதுதான் இன்றைய தலையாயக் கடமை. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியத்திலும் அவசியமாக இருக்கிறது.

முயற்சி தோற்றுப்போகாமல் இருக்க, சுழியத்திலேயே இருந்தால் மக்கள் புதிய சூழலை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்

ஹரிராயா பெருநாளுக்குப் பிறகு உயர்ந்து வந்த எண்ணிக்கை முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஒற்றை எண்ணுக்கு மாற்றமடைந்திருக்கிறது என்றால் தொற்றின் பாதிப்பை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. இறப்பும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இல்லை.

கூட்டங்கள் , கல்யாணம், பொது நிகழ்சிகளுக்கு வாய்ப்புகள் இருப்பதால் தொற்றின் நிலைமை அணுக்கமாகக் கண்காணிக்கப்படும். நேற்று புதிய அறுவர் தொற்றில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். நால்வருக்குத் தொடர்பிலும், இருவருக்கு வெளியிலிருந்து பரவியதுமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அந்த இருவரும் மெக்சிக்கோ, இந்தியாவைச்செர்ந்தவர்கள். மக்கள் இன்னும் பாதுகாப்போடு இருந்தால் ஜூலை மாதத்திற்குள் சுழியத்தைப்பதிவு செய்துவிடலாம். என்று டத்தோ டாக்டர் நூர் இஷாம் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here