பிள்ளைகளின் ஆதரவின்றி எத்தனையோ தாய் தந்தையர் வீதியிலும் முதியோர் இல்லங்களிலும் வாழ்கிறார்கள்.
அவர்களை பரிதவிக்க விடாமல் அன்போடு பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் கடமை என மம்பாங் டி அவான் இந்து சமூக கலாச்சார பண்பாட்டு சங்கத்தின் தலைவர் மு. சுப்பிரமணியம் கருத்துரைத்தார்.
அன்னையர் தந்தையரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுக்கும் சங்கம், இவ்வாண்டு தந்தையர் தினத்தை எளிமையான முறையில் கொண்டாடியது என அவர் தெரிவித்தார்.
பிள்ளைகள் எவ்வாறு பெற்றோரை பாதுகாக்க வேண்டுமோ அவ்வாறு பெற்றோரும் பிள்ளைகளை சரியான முறையில் வளர்த்திருக்க வேண்டும். அப்படி தங்களின் கடமையை முறையாக ஆற்றிய தாய் தந்தையரை நிகழ்ச்சியில் கௌரவிப்பது வழக்கம் என தெரிவித்த அவர், இம்முறையும் சிறந்த தந்தையர்களை கௌரவித்ததாக குறிப்பிட்டார்.
எஸ்.ஓ.பி- விதிமுறை பின்பற்றப்பட்டு நடத்தப்பட்டஇவ்விழாவில், மாலிம் நாவார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேஷ்விந்தர் சிங், கம்பார் மாவட்ட மன்ற உறுப்பினர் எம். கணேசன் மற்றும் தந்தையர்களும் என 20 பேர் கலந்து சிறப்பித்தனர்.
ராமேஸ்வரி ராஜா