உலக குத்துச்சண்டை வீரர்களுக்கும் கொரோனா!

உலக அளவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து உள்ளது. அமெரிக்காவில் முன்பை விட இப்போது தீவிரமாகிவருகிறது. இந்த நிலையில், உலகக் குத்துச்சண்டை நிகழ்ச்சிகள் ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளது.

குத்துச்சண்டை வீரர்கள், ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன., குத்துச்சண்டை வீரர்கள், ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை பல நாட்களாக வெளி உலகுக்கு கூறாமல் இருந்த ரகசியம் இப்போது அம்பலமானது

ஊழியர்கள் பலர் சமூக வலைதளங்களில் தாங்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறி வருகின்றனர். அமெரிக்காவில் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். நியூயார்க், கலிபோர்னியா மாகாணங்களில் மட்டும் அதிக அளவில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு மற்ற மாகாணங்களுக்கும் பரவத் துவங்கி உள்ளது.

குத்துச்சண்டை நிகழ்ச்சிகள் ப்ளோரிடா மாகாணத்தில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது, அந்த மாகாணத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 24ஆம் நாள் 5,500க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் அதிகரித்தது முதல், ரசிகர்கள் இல்லாத அரங்கில் தான் குத்துச்சண்டைப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால், அதே சமயம் ஊழியர்கள், வீரர்கள் சமூக இடைவெளி இன்றி இருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

.கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலைச் சமாளிக்க சிலரை வேலையில் இருந்து நீக்கியிருக்கின்றனர். சில வீரர்கள் கொரோனா வைரஸ் அச்சத்தால் விலகியும் உள்ளனர். 24 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here