ஜாலான் தம்பின் ஸ்ரீ முனிஸ்வரர் ஆலய கதவு பூட்டப்பட்டது

நூற்றாண்டுக்கும் மேல் பழமைவாய்ந்த இங்குள்ள 5வது மைல் ஜாலான் தம்பின் ஸ்ரீ முனிஸ்வரர் ஆலய இரும்பு கதவை ஒரு கும்பல் பூட்டி பக்தர்களின் வழிப்பாட்டு்டுக்கு இடையில் ஏற்படுத்தினார்கள் என அந்த ஆலயத்தின் செயலாளர் கணேசன் கண்ணையா கூறினார்.

நேற்று முன் தினம் இரவு 7.30 மணியளவில் சுமார் ஆறு பக்தர்கள் ஆலயம் உள்ளே இறை வழிப்பாட்டை மேற்கொண்டிருந்தப் போது, தாங்கள் இந்த ஆலயத்தின் நிர்வாகம் என கூறியவாறு, அப்பக்தர்களை அங்கிருந்து விரட்டியடித்ததோடு, ஆலய இரும்புக் கதவை பூட்டைக் கொண்டு பூட்டி விட்டு சென்றார்கள் என இக்கோயிலில் நீண்டக்காலமாக தொண்டாற்றி வரும் வீரபூசாரி கண்ணன் கூறினார்.

கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த இவ்வாலயம், கடந்த சில 22ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. பக்தர்களும் காலை மாலை என இரு நேரமும் ஆலயத்திற்கு வந்து இறை வழிப்பாட்டை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் திடிரென்று நேற்று முன் தினம் இரவு தொடங்கி ஆலய கதவு பூடப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைப்பெறும், ஆனால் ஆலயம் பூடப்பட்ட நிலையில் இருந்து வருவதை அவர்கள் சுட்டிக்பாட்டினார்கள்.

இக்கும்பலின் அராஜகச் செயல் குறித்து நேற்று இங்குள்ள செனாவாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு பதிவு இலாகவில் இந்த ஆலய நிர்வாகம் பதிவு செய்துள்ளது. நிலைமை இப்படி நாங்கள்தான் இந்த ஆலய நிர்வாகம் என ஒரே குடும்பத்தை சார்ந்த கும்பல் ஒன்று அராஜகச் செயலில் அண்மைக்காலமாக ஈடுப்பட்டு வருகிறது. அக்கும்பல் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆலய நிர்வாகம் தயங்காது என்றும் கணேசன் எச்சரிக்கை விடுத்தார்.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here