உடைந்த கண்ணாடி ஜன்னலிலிருந்து கண்ணாடித் துண்டுகளை எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற 42 வயதான வேலையற்ற நபருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த ஆண்டு மே 17 ஆம் தேதி இரவு 11 மணியளவில் கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் உள்ள குறைந்த கட்டண பிளாட் யூனிட்டில் இந்தச் செயலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 42 வயது நபரான ஜேக்கப் ஸ்டான்லி மீது மாஜிஸ்திரேட் அய்னா அசாஹ்ரா அரிஃபின் தண்டனை வழங்கினார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 309 இன் கீழ் இந்தக் குற்றச்சாட்டு உருவாக்கப்பட்டது, இதற்காக ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
அதே நீதிமன்றத்தில், ஊனமுற்ற ஒரு நபருக்கு (OKU) 30 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது, தனது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தில் உண்மையான வரவு குறித்து திருப்திகரமாகப் பதிலளிக்கத் தவறியதற்காகத் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
இங்குள்ள பிரிக்ஃபீல்ட்ஸ், ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஓர் உணவகத்தில் ஏப்ரல் 20 முதல் மே 10, 2016 வரை நிகழ்ந்த சோதனையில் அவர் இக்குற்றத்தைப் புரிந்திருக்கிறார். 25 வயதான முஹமட் ஷாருல் ரோஸ்லி இக்குற்றத்தை ஒப்புக்கொண்டார்.