திடீர் வெள்ளம் காரணமாக புக்கிட் திங்கி சாலை தற்காலிகமாக மூடப்பட்டது

புக்கிட் திங்கி:

நேற்றிரவு பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக கெந்திங் செம்பாவில் இருந்து ஜண்டா பைக் வரையிலான சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

நேற்றிரவு 9 மணியளவில் நடந்த சம்பவத்தில், புக்கிட் திங்கி நகரின் கீழ் பகுதியை நோக்கி மலையில் இருந்து மண் மற்றும் குப்பைகள் கீழே வெள்ளத்துடன் வந்து, வாகனங்கள், பண்ணைகள், கடைகள் மற்றும் வீடுகளை மூழ்கடித்தன.

நகரம் கிட்டத்தட்ட முழுவதுமாக சேற்றால் மூழ்கடிக்கப்பட்டிருந்தது என்றும், வெள்ள நீர் வடிந்த பிறகு துப்புரவு பணிகள் தொடங்கப்பட்டதாகவும், ஆனால் சேறும் சகதியுமாக நகர் முழுதும் காணப்படுவதால் அவற்றை பழைய நிலைக்கு மீடடெடுக்க பல நாட்கள் ஆகும் என்று பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யங் சைஃபுரா ஓத்மான் கூறினார்.

“கெந்திங் செம்பாவில் இருந்து ஜண்டா பைக் வரையிலான சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சாலையை சரிசெய்வதற்காக அது ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும்” என்று அவர் தாது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறினார்.

மேலும் பழைய புக்கிட் திங்கி சாலையில் இருந்து கம்போங் ஜண்டா பைக்கிற்குச் செல்ல ஒரே ஒரு சாலை மட்டுமே திறந்திருப்பதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here