எஸ்.பி.எம். தேர்வில் சிறப்புத் தேர்ச்சிபெற்று ஆசிரியர் துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்ளவிருக்கும் மாணவி த.சங்கீதாஷினிக்கு ம.இ.கா. உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இங்குள்ள பண்டார் மக்கோத்தாவைச் சேர்ந்த மாணவி த. சங்கீதாஷினி ஜோகூர் தெமாங்கோங் ஆசிரியர் கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பை மேற்கொள்ளவிருக்கிறார்.
அவருக்கு மஇகா கோலாலங்காட் இளைஞர் பகுதித் தலைவரும் சிலாங்கூர் மாநில ம.இ.கா. இளைஞர் பகுதித் தலைவருமான ரெ.ஸ்ரீதரன் மடிகணினி வழங்கிய வேளையில் மஇகா பண்டார் மக்கோத்தா கிளைத் தலைவர் முனுசாமி ராஜா 500 வெள்ளி ரொக்கப் பணம் வழங்கினார்.
எஸ்.பி.எம். போன்ற முக்கிய தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சிபெற்று உயர் கல்விக் கூடங்கள் செல்லும் வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு ம.இ.கா. தொடர்ந்து உதவி வரும் என்று ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.
தனது பட்டப் படிப்பிற்கு உதவி செய்த ம.இ.கா. வின் ஸ்ரீதரன், முனுசாமி ராஜாவிற்கு மாணவி சங்கீதாஷினியும் அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
எம்.எஸ்.மணியம்