ஆலயம் செல்வது பேரின்பம்

வழிபாட்டுத்தலங்கள் என்பது மன இறுக்கத்திற்கு மாற்று மருந்தாக இருக்கின்றன. ஆலயம் செல்வது பேரின்பமானது. வயதில் மூத்தவர்களுக்கு ஆலயம் செல்வது என்பது எப்போதும்  ஆனந்தமானதாகவே இருக்கும்.

ஆனாலும், மூத்த குடிமக்கள் ஆலயம் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. எஸ் ஓ பி வழக்கத்தின்படி  தடையிருக்கிறது என்பது உண்மைதான். இதற்குக்காரணம் இருக்கிறது.

வயது முதிர்ந்தவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாகவே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று விரைவில் பரவிவிடும்.  அதற்காகவே மூத்த குடிமக்கள் ஆலயங்களுச் செல்லத்தடை என்றார்கள்.

ஆரோக்கியமாக இருக்கின்றவர்களுக்கு தடையில்லை, ஆனாலும் மூத்த குடிமக்கள் தாங்களாகவே முன்வந்து சுய சோதனை செய்துகொண்டால் முன்னெச்சரிக்கையோடு இருக்கலாம்.

உடல் ஆரோக்கியமாக இருப்பவர்களும் சோதித்துக்கொள்வதில் தவறில்லை. குறிப்பாக கூடல் இடைவெளிதான் இதற்கெல்லாம் சரியான வழிமுறை.

மூத்த குடிமக்கள் ஆலயங்களுக்குச் செல்வதை மிகவும் விரும்புவர். ஆதலால் ஆலய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்குத்தடை ஏற்படாத வண்ணம் எஸ் ஓ பி இருக்க வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here