பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவின் (BHEUU) தலைமை இயக்குநராக பொறுப்பேற்றார் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டாவூட்

புத்ராஜெயா: குடிவரவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டாவூட், பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவின் (BHEUU) தலைமை இயக்குநராக  இன்று முதல் பொறுப்பேற்கிறார்.

குடிநுழைவுத் துறையின் இயக்குநர் இன்று தனது கடமைகளை ஒப்படைத்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கைருல் டிஸைமி இந்த நியமனத்தை உறுதிப்படுத்தினார்.

நான் நான்கு வருடங்கள் பதவியில் பணியாற்றியதால், ஒரு முக்கியமான துறையின் தலைமை இயக்குநராக பணியாற்றது நீண்ட காலம் என்பதால், ஒரு மாதத்திற்கு முன்பே இடமாற்றம் பற்றிய அறிகுறி தெரியப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

கைருல் டிசைமி டிசம்பர் 1996 இல் அரசு சேவையில் சேர்ந்தார். ஜனவரி 14, 2019 அன்று குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார். உள்துறை அமைச்சகத்தின் துணைத் தலைமைச் செயலர் (கொள்கை மற்றும் கட்டுப்பாடு) உட்பட பல்வேறு அமைச்சகங்களிலும் பணியாற்றினார்.

இதற்கிடையில், தேசிய பதிவுத் துறையின் (JPN)  தலைமை இயக்குநராக இருந்த டத்தோ ரஸ்லின் ஜூசோ புதிய குடிவரவுத் துறை இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

அவரது புதிய நியமனம் குறித்து பேசிய கைருல் டிசைமி, சூலுவின் உரிமைகோரல்கள் உட்பட நாட்டின் சட்ட விவகாரங்கள் சம்பந்தப்பட்ட சில உயர் சட்ட சிக்கல்களைக் கையாள வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here