கோவிட்-19 – இன்று புதிய சம்பவங்கள் 10

பெட்டாலிங் ஜெயா: கோவிட்-19 இன்று 10 புதிய சம்பவங்கள் பதிவாகியிருக்கிறது. இதனால் நோய் தொற்றில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 8,616 ஆக இருக்கிறது.

சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹஷாம் அப்துல்லா கூறுகையில் பாதிக்கப்பட்டோரில் 6 பேர் மலேசியர்களாவர் என்றார். மற்ற நால்வரில் மூவர் நிரந்தர வசிப்பிட தகுதி பெற்றவர்கள் என்றார். இன்று இறப்பு எதுவும் பதிவாகவில்லை. இறப்பு 121ஆக நீட்டிக்கிறது.

இன்று நண்பகல் வரை மருத்துவமனையில் இருந்து 14 பேர் இல்லம் திரும்பியிருக்கின்றனர் என்றும் மொத்தம்  8,308 பேர் இதுவரை குணமடைந்திருக்கின்றனர் என்றார். குணமடைந்தோர் எண்ணிக்கை 96.4 விழுக்காடு என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here