சிங்கப்பூர் , மலேசியக் கடவுகள் இலகுவாக்கப்படும்!

குடியரசில் பணிபுரியும் மலேசியர்களை இரு நாடுகளுக்கும் இடையில் தினமும் பயணிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மலேசியா சிங்கப்பூரைக் கேட்டுக் கொண்டுள்ளது என்று பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார் .

இரு நாடுகளின் எல்லைகளையும் மீண்டும் திறப்பது குறித்து விவாதித்த முஹிடின்,  ஒரு தொலைபேசி உரையாடலின் போது சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங்கிற்கு இதை தெரிவித்தார்.

தனது சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், மலேசியாவும் சிங்கப்பூரும் தங்கள் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதைக் கூறினார்

எல்லைகளை மீண்டும் திறப்பதன் வழி, சுகாதார வழிகாட்டுதல்கள்,  பொருளாதார , சுற்றுலாத் துறைகளுக்கு புத்துயிர் ஊட்டும்  நெறிமுறைகளில் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதில் உடன்படுவதாகவும், இது, இரு நாடுகளுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்றும் முஹிடின் செய்தியாளர்களிடம் கூறினார்.

இரு நாடுகளுக்கிடையிலான  நகர்வுகளை எளிதாக்குவதற்கு முன்மொழியப்பட்ட சுமூகப்  பாதையை உறுதி செய்வதற்காக மலேசியாவும் சிங்கப்பூருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறது.

இப்புரிந்துணர்வு செயல்படுத்தப்பட்டால், இரு நாடுகளின் மக்களுக்கும், பணி நிமித்தம் அன்றாடம் எல்லை தாண்டிப் பயணிப்பதற்கு  உதவும்.

இந்த ஏற்பாட்டின் கீழ், இரு நாடுகளிலும் வசிப்பவர்கள் மற்ற நாட்டில் மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு வேலை செய்ய முடியும், மேலும் விடுப்புக்குச் செல்லும்போது அவர்கள் பிறந்த நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

.சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள்,  இரு நாடுகளின் சுகாதார வல்லுநர்களால் நன்கு வடிவமைக்கப்பட்ட எஸ்ஓபி , எல்லைகளை மீண்டும் திறக்கும் திட்டத்திற்கு உதவியாக இருக்கும் என்பதில் இரு நாடுகளும் நம்பிக்கை கொண்டுள்ளன .

இருப்பினும் இரு நாடுகளின் சுகாதார சூழலைப்பொறுத்தே நடைமுறை சாத்தியப்படும் என்றும் டான்ஶ்ரீ முஹிடின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here