ஆபத்தான முறையில் காரை ஓட்டியவரை 54 கிலோமீட்டர் துரத்திச் சென்று, கைது செய்த போலீஸ்

ரெம்பாவ், மே 6 :

நேற்று, இங்கு வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய 223ஆவது கிலோமீட்டரில் ஆபத்தான முறையில் தோயோத்தா ஆல்டிஸ் காரை ஓட்டி வந்த ஒருவரை, புக்கிட் அமான் தெற்கு மண்டல நெடுஞ்சாலை ரோந்து போலீசார் (EMPV) கைது செய்தனர்.

ரெம்பாவ் மாவட்டக் காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர், ஹஸ்ரி முகமட் கூறுகையில், சாலை விபத்தில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை மேற்கொண்டிருந்த EMPV செக்டார் 2 பெடாஸ்-ஆயிர் கெரோவின் உறுப்பினர்கள், ஒரு வெள்ளி நிற தோயோத்தா ஆல்டிஸ் கார் ஆபத்தான மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் ஓட்டப்படுவதைக் கண்டனர்.

அதனைத் தொடர்ந்து வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் (தெற்கு நோக்கி) கிலோமீட்டர் 223 முதல் கிலோமீட்டர் 169 வரை, அந்தக் காரை போலீஸ் குழு துரத்தியது.

24 வயது ஓட்டுநரும் 17 வயது பயணியும் தாங்காக் EMPV குழுவின் உதவியுடன் தாங்காக் டோல் வெளியேறும் இடத்திற்கு அருகில் கிலோமீட்டர் 169 இல் தடுத்து வைக்கப்பட்டனர்.

“லோரி ஓட்டுநராக பணிபுரிந்த அந்த காரின் ஓட்டுநரின் மூச்சுப் பரிசோதனையின் முடிவுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட மதுவின் அளவு அதிகமாக உட்க்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், இருவரின் சிறுநீர் பரிசோதனையும் போதைப்பொருளுக்கு எதிர்மறையாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

காவல்துறை பதிவுகளை மறுஆய்வு செய்ததில், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 435 இன் கீழ் ஓட்டுநர் கடந்த காலப் பதிவைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்ததாகவும், அதே நேரத்தில் பயணி குற்றவியல் சட்டத்தின் பிரிவு 394 இன் கீழ் கடந்த காலப் பதிவைக் கொண்டிருந்ததாகவும் ஹஸ்ரி கூறினார்.

அவரது கூற்றுப்படி, தற்போது இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 இன் பிரிவு 45 (ஏ) இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here