கம்போங் சுங்கை ராயாவில் பெய்த கடுமையான மழையால் வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட இந்திய குடும்பங்களுக்கு கெஅடிலான் கட்சியின் சார்பாக லிங்கி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரோஸ்லி வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கினார்.
போர்ட்டிக்சன், ஜாலான் தஞ்சோங் ஆகாஸ் சாலையில் அமைந்துள்ள கம்போங் சுங்கை ராயாவில் கடந்த செவ்வாய்க்கிழமை வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பல பொருட்கள் சேதமடைந்ததாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான தனபாலன் கூறினார்.
இந்த வெள்ளச் சம்பவத்தைத் தொடர்ந்து ரோஸ்லி நேற்று அந்த கம்பத்திற்கு விரைந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கினார்.
பலர் உடமைகளை இழந்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசாங்கம் மூலம் பெற்றுத் தறுவதற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக ரோஸ்லி தெரிவித்தார்.
– க.கலை