இந்த ஆண்டு இறுதிக்குள் பாலியல் துன்புறுத்தல், சமூகப் பணிகளைத் தொழிலாக அங்கீகரிப்பது தொடர்பான மசோதாக்களை பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சகம் முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் டத்தோஶ்ரீ ரினா முகமட் ஹருண் இரண்டு மசோதாக்களிலும் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவை இரண்டும் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்படவிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு நாடாளுமன்ற அமர்வின் போது இரு மசோதாக்களையும் அட்டவணையில் வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அவர் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். அமைச்சின் இலக்கு, குழுக்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிமுகப்படுத்துவதாக இருக்கும். அதாவது குழந்தைகள், தனித்து வழும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் இதில் அடங்குவர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்மொழியப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மசோதா, பாலியல் துன்புறுத்தலுக்கு விரிவான வரையறையையும் புகார்களை அளிக்க மிகவும் பயனுள்ள வழிமுறையையும் வழங்கும். சமூகப் பணிகளை ஒரு தொழிலாக அங்கீகரிப்பதற்கான முன்மொழியப்பட்ட மசோதா சமூக சேவையாளர்களைப் பதிவு செய்வதற்கும் சமூகப் பணி தரங்களை அமைப்பதற்கும் மலேசிய சமூகப் பணி தொழில் ஆலோசனை மன்றம் ஒன்றை நிறுவ முற்படுவதாக இருக்கும்.
சீரமைப்பட வேண்டிய பல்வேறு கொள்கைகள் தமது அமைச்சில் உள்ளன என்றும் ரினா கூறினார். இந்த கொள்கைகளில் தேசிய, குழந்தைக் கொள்கை, மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை ஆகியவை அடங்கும் .
இந்த கொள்கைகளின் மிக முக்கியமான அம்சம் அதை செயல்படுத்துவதாகும். அந்த வகையில், இந்த இரண்டு நிலைகளிலும் வெவ்வேறு சட்டங்கள் இருப்பதால் இது அமைச்சகத்தை மட்டுமல்ல, மாநிலங்களையும் உள்ளடக்கியிருப்பது நல்லது.
அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் மக்கள் புரிந்துகொள்ளவேன்டும் என்றார் அவர்.
வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்
வீட்டிலிருந்தபடியே தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்று கேட்டதற்கு, இந்த விஷயத்தில் பல்வேறு தரப்பினர்களின் மேலதிக விவாதங்கள் தேவை என்று அமைச்சர் ரினா ஹருண் கூறினார்.
இப்போது வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை உள்ளது, இதன் பொருள் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது செய்யக்கூடிய ஒன்றுதான். இருப்பினும் அதைத்தொடர்ந்து செயல்படுத்த, மேலும் விவாதங்கள் தேவை, ஏனெனில் சிலர் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும், மற்றவர்கள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்றார் அவர். தனது அமைச்சகத்தை சுட்டிக்காட்டிய அவர், சமூக நலத்துறையின் (ஜே.கே.எம்) சுமார் 9,000 பேரில் 5,000 பேர் மட்டுமே பணியாற்றுவதாகக் கூறினார்.