வீரத்தின் அழகு மேரி கோம்

ஆறுமுறை உலகக் குத்துச்சண்டை பட்டம் வென்றுள்ள மேரிகோம், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியிருக்கிறார். தனக்கு விதவிதமாக சமைப்பது பிடிக்கும் என்கிறார். சாதாரண நாட்களை விட தற்போது, தன்னுடைய குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிப்பிக்களை சமைத்து தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

டான்ஸ், பாட்டுப் பாடுவது உள்ளிட்டவை மிகவும் பிடித்தாமானது என்றும், தனது குழந்தைகளுடன் சேர்ந்து இவற்றை செய்து வருவதாகவும் மேரிகோம் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பிட்னஸ் பயிற்சிகளையும் விடாமல் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும், இந்த ஊரடங்கு பல்வேறு சவால்களை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விளையாட்டு சிறந்த கேரியர். குத்துச்சண்டை ஆண்களுக்கு நிகரான வீர், சவாலான கேரியர். இந்த இரண்டுமே சிறந்த கேரியர் வாய்ப்புகள் என்ற தெரிவித்துள்ள மேரிகோம், இதன்மூலம், நல்ல வசதி, அதிர்ஷ்டம், புகழ் போன்றவை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டிற்காக விளையாடுகிறோம் என்ற பெருமையும் நமக்கு கிடைக்கும் என்று கூறியுள்ள மேரிகோம், இதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் இரண்டு கைகளால் அதை வரவேற்கவும் விரும்புவதாகக்கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here