சீனாவின் மாஸ்டர் பிளான் என்ன? போரா?

லடாக்கில் இருக்கும் பாங்காங் திசா பகுதியில் சீனா வேகமாக கட்டுமான பணிகளை செய்து வருகிறது. உலக நாடுகளை இணைக்கும் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் இதற்கு முழு பின்னணியாக இருக்கிறது. லடாக் எல்லையில் இருக்கும் முக்கியமான கட்டுப்பாட்டு பகுதிகளையே சீனா குறிவைக்க தொடங்கி உள்ளது.

முதலில், பாங்காங் திசா நதி இருக்கும் பகுதியில் மட்டும் சீனா ஆக்கிரமிப்புகளை செய்தது. அதன்பின் கல்வான் பகுதியில் ஆக்கிரமிப்புகளைச் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக லடாக் உச்சியில் இருக்கும் டெப்சாங் பகுதியில் தீவிரமாகப் படைகளைக் குவித்து வருகிறது.

தற்போது மீண்டும் பாங்காங் திசோ பகுதியில் படைகளை குவித்து வருகிறது சீனா. திரும்பிச் செல்லுங்கள், மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று சீனாவை கடுமையாக எச்சரித்திருக்கிறது இந்தியா.

பாங்காக் திசோ பகுதியில் பிங்கர்கள் (Finger) எனப்படும் 8 கட்டுப்பாட்டு பகுதிகள் இருக்கின்றன. இந்த 8 கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் 4 கட்டுப்பாட்டு பகுதிகள் இந்தியா வசம் இருந்தன. மீதம் இருக்கும் நான்கு கட்டுப்பாட்டுப் பகுதிகள் சீனாவிடம் உள்ளன. இதில் 8ஆவது பகுதியில் சீனா நிரந்தர ராணுவத் தளம் ஒன்றை அமைத்துள்ளது.

தொடர்ந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டும் வருகிறது சீனா. அந்த பாங்காங் திசோ நதியை மொத்தமாக ஆக்கிரமிக்கும் வகையில், சீனா இப்படி செய்கிறது. அங்கு கடந்த ஒரு மாதமாக சீனா கூடாரங்கள் அமைத்து வந்தது. பதுங்கு குழிகளை அமைத்தன.
புதிதாக சீனா ஹெலிபேட் ஒன்றையும் அமைத்துள்ளது. அதிக அளவில் வீரர்களை களமிறக்க வசதியாக சீனா அங்கே ஹெலிபேட் அமைத்திருக்கிறது. இதனால் அங்கே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் புதிய திருப்பமாக, இந்தியாவின் கீழ் வரும் பிங்கர் பகுதி 3 மீது சீனா கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. இந்திய வீரர்கள் எல்லோரும் பிங்கர் 2க்குச் செல்ல வேண்டும். மூன்றில் இருக்க கூடாது என்று சீனா அத்துமீறி வருகிறது.

மொத்தமாக பாங்காங் திசோ நதியை ஆக்கிரமிக்கும் வகையில் சீனா இப்படி செய்கிறது. சீனாவின் செயல் போருக்கான அழைப்பு போல பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கல்வான் பகுதியில் சீனா ஆக்கிரமிப்புகளைச் செய்துள்ளது. அங்கே அதிகமாக படைகளைக் குவித்து வருகிறது. ஆயுதங்களை இறக்கி வருகிறது. இன்னொரு பக்கம் டெப்சாங் பகுதியில் தீவிரமாக படைகளை இறக்கி வருகிறது. தற்போது பாங்காங் திசோ பகுதியில் ஆக்கிரமிப்புகளை அதிகமாக்கி உள்ளது. இதனால் லடாக்கை கொஞ்சம் கொஞ்சமாக சீனா சுற்றிவளைக்க தொடங்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here