மறிக்கவில்லை மனிதம்

ரவாங் பகுதியில் ஒரு காட்சி படமாகிக்கொண்டிருப்பதாக நினைப்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் உண்டு. உலக அரங்கில் அனைவரும் நடிகர்கள் என்று சொன்னால் அது அரசியல்.

அதிலும் ஒன்றுக்கும் வழியில்லாமல் இருப்பவர்கள் நடிக்கிறார்கள் என்று கூறமுடியுமா? இதற்குப்பெயர் அலட்சியம்.

பலர் பார்த்துச்சென்றார்கள், சிலர் விசாரித்தார்கள். ஓரிருவர் மட்டுமே உதவ முன்வந்தனர்.  இங்குள்ள விளையாட்டரங்கில் ஒருதாய் கைக்குழந்தையுடனும் மூன்று பிள்ளைகளுடன் போக்கின்றி இருப்பதைக் கண்ட கண்கள் அதிகம்.

இவர்களைக் கவனித்த சகோதரர், அவரும் விசாரித்தார். அப்பெண்ணின் கணவருக்குக் கடுமையான நோய் . செய்த காவல் வேலையும் நீடிக்கவில்லை. உறைவிடம் இல்லை. உணவுக்கு வழியிலை. உடுக்க உடையில்லை. பிள்ளைகள் புத்திசாலிகள் என்பதை பேசி அறிந்துகொண்டார். கல்வியில் உயர்ந்த சிந்தனையுடன் இருக்கும் அவர்கள் கவலையின்றி ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தார்கள்.

இவர்களுக்கு ஒருவீடும் படுக்கும் வசதிகளளுடன் செய்து கொடுக்கப்பட்டன. செலவுக்குப்பணமும் கொடுக்க்பட்டன. கேள்விப்பட்டதும் ஏர்பாடு செய்தவர் இத்தொகுதியின் அரசியல்வாதி டத்தோ அஹ்மட் பாரி முக்கியத்தேவைளுக்கு கரம் நீட்டியதைக் கருணையோடு நினைத்துப்பார்க்கிறார் அந்தப்பெண்மணி.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வழிகிடைத்துவிட்டது. பார்வையாளர்கள் இன்னும் விசாரிக்கிறார்கள். விசாரித்துகொண்டே இருக்கிறார்கள்.

உதவி செய்வதற்கு இன்னும் சரியான நேரம் மட்டும் வரவேயில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here