நேற்று இரவு 10.25 மணியளவில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போதைப் பொருள் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் காரில் கஞ்சா வைதிருந்த இருவர் கைது செய்யப்பட்டனர் என்று ஓசிபி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.
கிளானா ஜெயா ஜாலான் பிஜேயு 1எ/3 இல் ஹோன்டா சிவிக் ரக காரில் ஆண் பெண் இருவர் சென்றுக் கொண்டிருந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அவர்களின் காரிலிருந்து போலீசார் 70 கிராம் எடை கொண்ட 2 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். இருவரும் அங்கேயே கைது செய்யப்பட்டனர்.
இருவருக்கும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆண் போதைப் பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்தது. பெட்டாலிங் ஜெயா வட்டாரத்தில் இவர்கள் கடந்த 3 மாதக் காலமாக போதைப் பொருட்களை விநியோகித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் மேல் விசாரணைக்காக 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நிக் எஸானி கூறினார்.