ஜாலான் துன் ரசாக்கிலிருந்து எம்ஆர்ஆர் 2 நெடுஞ்சாலைக்கு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரை டோவிங் லோரி ஒன்று மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
நேற்று மதியம் 2.50 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் லோரியின் முன் பகுதியில் 30 வயது நிரம்பிய மோட்டார் சைக்கிளோட்டி சிக்கிக் கொண்டார். சுங்கை பீசி தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மோட்டார் சைக்கிளோட்டியை வெளியில் எடுத்தனர். பலத்த காயத்துடன் இருந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் என்றும் சம்பவ இடத்தில் இருந்த தீயணைப்பு குழுவின் தலைவர் சாலே பின் டாவுட் தெரிவித்தார்.