கோலாலம்பூர் போதைப் பொருள் குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் போதைப் பொருள் விநியோக கும்பல் ஒன்று பிடிப்பட்டது.
கடந்த 26ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் ஜாலான் ஈப்போ அடுக்ககத்தின் கார் நிறுத்தும் இடத்தில் 28 வயது நிரம்பிய ஒரு சீன பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10.10 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர் என்று கோலாலம்பூர் போதைப் பொருள் குற்றப் பிரிவு தலைவர் எசிபி அட்னான் பின் அஸிசோன் தெரிவித்தார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மூலம் இரவு 10.05 மணியளவில் ஜாலான் ஈப்போவில் உள்ள ஓர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 28,18 வயது நிரம்பிய இரு சீன ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 549.05 கிராம் எடைக் கொண்ட எம்டிஎம்எ வகை போதைப் பொருள், 147.10 கிராம் கெத்தமின, 119.15 கிராம் கஞ்சா, 107.35 கிராம் எரமின் மாத்திரைகள், 19.80 கிராம் எக்ஸ்தசி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு, 17,566.00 ரொக்கப்பணம், பிஎம்டபிள்யூ, ஹோன்டா சிவிக் ரக கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடமும் சிறுநீர் சோதனை மேற்கொண்டதில் அவர்கள் கொத்தமின் வகை போதைப் பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் மேல் விசாரணைக்காக 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மொத்தம் 823 பேருக்கும் விநியோகம் செய்யலாம். மொத்த போதைப் பொருட்களின் மதிப்பு 91,262.00 வெள்ளியாகும். ரொக்கப்பணம் 17,566.00, இதர பொருட்களின் மதிப்பு 8,010.00, வாகனங்களின் மதிப்பு 2,00,000.00 ஆகும்.
இவ்விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மூலம் ஒரு சீன ஆடவரும் கொரியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் 27ஆம் தேதி அதிகாலை 3.45 மணியளவில் பத்து கேவ்ஸில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 274.56 கிராம் கெத்தமின், 51.5 கிராம் எம்டிஎம்எ, அல்பார்ட் ரக கார், 61,000.00 ரொக்கப்பணம் உள்ளிட்ட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 290 பேருக்கு விநியோகம் செய்யக் கூடிய போதைப் பொருட்களை இவர்கள் வைத்துள்ளனர். கடந்த ஓர் ஆண்டு காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்த இருவரும் மேல் விசாரணைக்காக 6 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர்.
போதைப் பொருட்களின் மதிப்பு 46,334.00 ரொக்கப்பணம் 61,000.00, வாகனங்கள் 2,000.000.00, இதர பொருட்கள் 17,400.00 வெள்ளியாகும்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் இவர்கள் நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இந்த அதரடி சோதனையின் மூலம் இக்கும்பலை போலீசார் கைது செய்தனர் என்று எசிபி அட்னான் கூறினார்.
இக்கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப் பொருட்களின் மதிப்பு 137,596.00 வெள்ளியாகும். ரொக்கப்பணம், வாகனங்கள், இதர பொருட்களின் மதிப்பு 503,976.00 வெள்ளியாகும். இவற்றின் மொத்த மதிப்பு 641,572.00 வெள்ளியாகும்.