சுற்றுலா, சுற்றுலாவுக்கு முயற்சி என்பதெல்லாம் பேச்சாக இல்லாமல் சிலாங்கூர் மாநில சுற்றுலா சங்கம் ஒருமாறுபட்ட சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது.
அச்சஙத்தின் தலைவர் பிரேம் ஆலோசனையில் இச்சுற்றுலா அமந்திருந்ததைக் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
ருக்குன் நெகாரா கோட்பாட்டில் ஒன்றான மன்னருக்கு விசுவாசம் என்பதை பேச்சோடு மட்டும் வைத்திராமல், மன்னர்கள் பற்ரியும் சிலாங்க்கூர் மாநில ஆட்சியாளர்களின் வரலாற்றையும் தெரிந்துகொள்வது முக்கியம் என்றார். இந்த யோசனை அனைவருக்கும் பிடித்திருந்தது.
சிலாங்கூர் மாநிஅல் அரண்மனை விஜயம் தொடங்கியதும் முதலில் கிள்ளானில் உள்ள பழைய அரண்மனைக்குப்பயணம் தொடங்கியது.
அக்கால மன்னர்கள் பயன்படுத்திய அனைத்தும் அங்கிருந்தன. இதுவரை காணாத, கேடறியாத பல செய்திகள் விளக்கங்களாக கிடைத்தன. பிரேம் ஒவ்வொன்றுக்கு சிறப்பான விளக்கங்கள் அளித்தார்.
அதில் முக்கியமான செய்தியாக மதினாவின் காபா மீது போர்த்தப்பட்டிருந்த கறுப்புத்துணி ஒன்று அரண்மனை பொருட்காட்சியகத்தில் இருக்கும் செய்திதான். இதே போன்ற ஒரு புனிததுணி மலேசிய தாபுங் ஹாஜியிலும் இருப்பதாக அவர் கூரினார்.
ஒரு காலத்தில் இன்றைய போர்ட்டிக்ஷன் லுக்குட் நகரம் சிலாங்கூர் மாநிலத்தில்தான் இருந்தாகவும் அவர் கூறினார்.
பழைய அரண்மனை பயணம் அசத்தலாக முடிந்தது, அடுத்து புதிய அரண்மனைப் பயணத்தில் வரவேற்புடன் காலைப்பசியாறலும் கிடைத்தன.
பொதுமக்கள் பார்க்கக்கூடிய அனைத்து இடங்களையும் பிரேம் விளக்கம் கூறினார். அனைத்தும் அறியாத செய்திகள் அறிந்துகொண்டபோது காலம் கடத்திவிட்டோமே என்றே உணர்ந்ததாக பயணிகல் கூறினார்.
அரண்மனை நிகழ்ச்சிகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன். எவ்வாறு ஏற்பாடு செய்யப்படுகின்றன, பட்டங்கள் வழங்கப்படும் வழிமுறைகள் குறித்த செய்திகள் யாவும் அதிசயமாய் இருந்தன.
அரண்மனையின் நிரந்தர இசைக்குடும்பம் ஒன்றிருக்கிறது. அரச நிகழ்ச்சிகளுக்கு அவர்களே இசைவழங்குவார்கள். இவர்கள் அனைவரும் பேராக் மாநிலத்துக்காரர்கள். என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் வழிவழி அரண்மனை இசையாளர்களாக இருக்கின்றனர்.
சிலாங்கூர் மாநில அரசுவழி ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுற்றுலாவில் அறிந்துகொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. மாணவர்களும், பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுச்செய்திகள் பிரமிப்பூட்டுகின்றன.