இறப்புச்சடங்குக்கு 1,000 வெள்ளி

பந்துவான் சாரா  ஹிடூப் (பிஎஸ்ஹெச்) அல்லது வாழ்க்கை உதவி நிதி  பெறுபவர்கள் இறப்பு இறுதிச் செலவுளுக்கு 1,000 வெள்ளி வரை பெறலாம்  என்று அதன் துணை நிதியமைச்சர் டத்தோ அப்துல் ரஹீம் பக்ரி தெரிவித்திருப்பது மக்களின் சிரமம் அறிந்து செய்யும் உதவியாகும்.

உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்) அலுவலகத்தில் இதைப்பெறுவதற்கான உரிமை கோரலாம் என்றார் அவர்.

பி.எஸ்.எச் பெறுநர்களும் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டமான மைசலாமிற்கும் தானாகவே தகுதியுடையவர்கள் என்றும் அப்துல் ரஹீம் கூறினார், மைசலாம் 45 முக்கியமான நோய்களுக்கான மருத்துவ கட்டணங்களைக் குறைக்கும் திட்டமாகும்.

ஒரு மருத்துவமனை அல்லது சான்றளிக்கப்பட்ட மருத்துவ மையத்தால் 45 முக்கியமான நோய்களுக்கு 8,000 வெள்ளி வழங்கப்படும்.

அவர்கள் 14 நாட்களுக்கு,  ஒரு நாளைக்கு 50 வெள்ளி வீதமும் மருத்துவமனையின் சலுகைகளையும் பெறுவார்கள், இது நோய்வாய்ப்பட்ட நேரத்தில் அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பி.எஸ்.எச் உதவி பெறாத, குறிப்பாக வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பலர் உள்ளனர் .

இந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பண உதவி வழங்குவதற்கான புதிய முறைகளைப் பயன்படுத்தவும்,  மக்களை சந்திக்கும் திட்டங்களை ஏற்பாடு செய்யவும் நிதி அமைச்சகத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

இதில், சிம்பானான் நேஷனல் (பிஎஸ்என்) தானியங்கி  இயந்திரத் தேவைகளை அதிகரிப்பது , போஸ் மலேசியா பெர்ஹாட்டை பிஎஸ்என் முகவர்களாக கிராமப்புற மக்களின் நலனுக்காக நியமிப்பது ஆகியவை அடங்கும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here