இந்தியா-சீன மோதல்: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – அமெரிக்கா தகவல்

நிலைமை மேலும் மோசமடையும் வகையில் இரு நாட்டு ராணுவமும் எல்லையில் போர் தளவாடங்களை குவித்து வருகின்றன. பதற்றத்தை தனிக்க இந்திய-சீன ராணுவ கமண்டர்கள் அளவிளான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், இந்திய-சீன பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஹெல்லி மெக்கிம்னி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், இந்திய-சீன பிரச்சனையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என இரு நாடுகளுமே விரும்புகின்றன. தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு அமைதியான முறையில் தீர்வுகான நாங்கள் முழு ஆதரவு தருகிறோம்.
மேலும், இந்தியா-சீனா எல்லையில் சீனாவின் ஆக்கிரோஷமான நிலைப்பாடு உலகின் பிற பகுதிகளில் சீன மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பின் முழு உருவத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை தன்மையை காட்டுவதாக அதிபர் டிரம்ப் கூறியதாக ஹெல்லி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here