இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனியர்கள் 14 பேர் பலி

காசா,இஸ்ரேல் மீது காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நீண்ட முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் காசா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர், அதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 5 பெண்களும் 7 குழந்தைகளும் அடங்குவர். இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து உடனடியாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here