காணாமல் போன ரவி அவ்வுலியார் – பிணமாக மீட்பு

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போனதாக சொல்லப்படும் ரவி அவ்வுலியார் இங்குள்ள பண்டார் ஸ்ரீ அஸ்தானா நீரோடையில் பிணமாக மீட்கப்பட்டார்.

ரவியின் உடல் கண்டெடுக்கப்பட்ட அந்த நீரோடை அவரது வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மட்மே உள்ளது.

57வயது ரவி அவுலியார் சுங்கைபட்டாணி மற்றும் கோலகெட்டில் வட்டாரத்தில் அரசியல் மற்றும் வியாபாரா ரீதியாக பிரபலமானவர்.

கடந்த ஜூன் 15ஆம் தேதி இரவு 11மணியளவில் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்களை வைத்துவிட்டு நடந்துச் சென்றவர் அதன் பிறகு அவர் இல்லம் திரும்பவில்லை அவரது குடும்பத்தினர் ஓரிரு நாட்கள் எங்கும் தேடியும் அவர் கிடைக்காத நிலையில் போலிஸில் புகார் செய்தனர்.

ரவியின் உடலை கண்டெடுப்பதற்கு முன்பாக மாலை 4.50 மணி அளவில் அப்பகுதியில் புல் வெட்டிக்கொண்டிருந்த ஆடவர் பிண வாடை வீசுவதை உணர்ந்தார் .நீரோடையில் ஆடவர் உடல் மிதப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தந்தார்.

ரவியின் குடும்பத்தாருக்கு தகவல் தரப்பட்டு அந்த உடல் ரவிதான் என உறுதி செய்யப்பட்டது.இதுகுறித்து கருத்துரைத்த கோலமூடா மாவட்ட ஓசிபிடி ASLI ABU SHAH சம்பந்தப்பட்ட ஆடவர் காணாமால் போனதாக போலீஸ் புகார் செய்யப்பட்ட காலக்கட்டத்திலேயே இறந்திருக்கலாம் என தாம்
நம்புவதாகச் சொன்னார்.

அவரது உடல் அழுகிய நிலையில் சில காயங்களுடன் காணப்பட்டதாகவும் சில விஷப்பிராணிகள் அவரது உடலை தின்றிருக்கலாம் என்று நம்புவதாகவும் அவர் மேலும் சொன்னார்.

அதோடு பணம்,கிரேடிட் கார்டு மற்றும் அடையாளக்கார்டுகள் அவர் வசம் அப்படியே இருந்துள்ளது. இது திடீர் மரணம் என அவர் தெரிவித்தார்.

ரவியின் உடல் சவப்பரிசோதனைக்காக அலோர் ஸ்டார் சுல்தான் அப்துல் ஹலிம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கு.அன்பரசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here