கூச்சிங், பௌ: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து; பெண் காயமடைந்தார்!

கோலாலம்பூர்:

சரவாக், பௌ, ஜாலான் குரோகோங் (Jalan Krokong), கம்போங் பெலிம்பிங் (Kampung Belimbing) பகுதியில், கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 43 வயதுடைய பெண் ஒருவருக்கு, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இன்று காலை, 9.20 மணியளவில், இந்த விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பௌ தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து (Bau Fire Station), ஒரு அமைப்பு குழு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது.

இருப்பினும், மீட்புப் படையினர் வருவதற்கு முன்பே, அப்பெண், பொதுமக்களால், வாகனத்திலிருந்து மீட்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்டார்.

பின்னர், தீயணைப்பு, மீட்புப் படையினர், அப்பெண்ணை, பள்ளத்தாக்கிலிருந்து வெளியே கொண்டு வந்து, அவருக்கு முதலுதவி அளித்தனர்.

அதன்பின், மேலதிக சிகிச்சைக்காக, பாதிக்கப்பட்ட பெண், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து காலை 9.37 மணியளவில், மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here