போலீசாரின் அதிரடி

போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் கள்ளச்சாராயம் காய்ச்சும் பேர்வழிகள் நால்வர் சிக்கினர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடைப்படையில் பூச்சோங் வட்டாரத்தில் இயங்கிவந்த நால்வரை வளைத்ததாக புக்கிட் அமான் உள்பாதுகாப்பு, பொதுமக்கள் புகார்ப்பிரிவின் இயக்குநர் அப்துல்லா சானி கூறினார். பிடிபட்ட இருவர் மியன்மாரியர்கள். இவர்கள் 30,40 வயதுடையவர்கள்.

இவர்களிடமிருந்து 87 மதுச்சார புட்டிகள் அடங்கிய பெட்டி கைப்பற்றப்பட்டது. மேலும் ஆறு x 200 லிட்டர் கொள்கலன், கறுப்பு நிற போதைச்சாரம் அடங்கிய 4 மரப்பீப்பாய்கள் கைபற்றபட்டன. இதன் சந்தை மதிப்பு 222,000 வெள்ளியாகௌம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களைக்கைது செய்ததன் வழி கிள்ளான் பள்ளத்தாக்கில் பிரபல மதுச்சார பெயர்களில் நடமாடிய போலி மதுவகை நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

கள்ள மதுவிற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் டொயோட்டா வெல்ஃபயர், செரீனா வகை வாகனங்களும் கைபற்றப்பட்டன.  இவர்கள் நான்கு நாட்கள் காவலில் வைத்து செக்ஷன்  135(1) (d) சுங்கத்துறைச் சட்டம் 1967 , செக்‌ஷன் 4(1) (c) கள்ளச்சாராயப்பிரிவு 1976 இன் கீழ் விசாரிக்கபடுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here