வெடி மருந்து தொழிற்சாலையில் வெடிப்பு

வெடிப்புச்சமபவத்தில் வெடி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையின் ஒருபகுதி சேதமுற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பத்து ஆராங்  சிலாங்கூர் மாநிலத்தில் சிறப்பான ஊராகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் இங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் பல இந்தியர்கள் வேலைபார்த்த இடமும் இங்குதான் இருக்கிறது. சுரங்கங்கள் மூடப்பட்டு பல வருடங்களாகிவிட்டன.

இங்குதான் வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலை பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையின் பணியாளர்கள் மதிய 1.45 மணிக்கு உணவுக்குச் சென்றிருந்தபோது வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக  கோம்பாக் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏசிபி அரிஃபாய் தராவி கூறினார்.

அங்குள்ள காவலர் தகவல் அளித்ததைத்தொடர்ந்து அத்தொழிற்சாலைக்குச் சென்றபோது ஒற்றைக்கட்டத்தின் ஒருபகுதி மட்டுமே சேதமுற்றிருந்தது. உயிருடற்சேதங்கள் ஏதும் இல்லை என்ற அவர், வெடிமருந்து நிபுணர்கள், தீயணைப்புப் பிரிவினரும் வெடிப்பு தொடர்பில் ஆய்வு செய்துவருவதாகவும் தெரிவித்தார்.

ஆய்வின் முடிவு வரும்வரை தொழிற்சாலை இயங்காது என்று கூறிய அவர், நிலைமை பாதுகாப்பாக இருப்பதாவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here