சிரம்பான்,
சிரம்பான் ஜெயாவில் கல்லூரியில் கல்வி கற்கும் இரண்டு இந்திய மாணவர்களுக்கு தேவையான மடிக் கணிணிகளை ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணாவும் வழங்கினர்.
சிரம்பானில் வசித்து வரும் நடராஜா என்ற இந்திய ஆடவர் மனைவியை இழந்து தன் நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரின் மகன் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் எரிவாயு தோம்புகளை விநியோகம் செய்து வருகிறார். அதன் மூலம் வருமானம் குறைவாக கிடைப்பதால் அந்த வருமானம் தன் குடும்பத்திற்கு மட்டும் சரியாக இருந்ததால் மகனுக்கு மடிக் கணிணியை வாங்க முடியாத நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பி.குணாவின் உதவியை நாடினார்.
க.கலை