இரண்டாம் சோதனைக்கு உட்படாதவர்கள் மீது நடவடிக்கை

கொரோனா தொற்றின் 600 க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தங்கள் வீட்டில்  தனிமைப்படுத்தப்பட்டபின் இரண்டாவது கோவிட் -19 சோதனைக்கு தங்களைத் தயார் படுத்திக்கொள்ளாதவர்கள். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த மைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

வீட்டில்  தனிமைப்படுத்தப்பட்டவர்கள்  13 வது நாளில் இரண்டாவது கோவிட் -19 சோதனை செய்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகும்.  இருப்பினும், 620 நபர்கள் இன்னும் இரண்டாவது பரிசோதனைக்கு இணங்கவில்லை, அல்லது வரவில்லை என்று அவர் கூறினார்.

மேலதிக தகவல்களுக்கு, அவர்கள் சுகாதார அமைச்சகத்தைத் தொடர்பு கொள்ளவேண்டும்.  அவ்வாறு செய்யத் தவறியவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை நினைவூட்டும்படி அவர் நினைவுறுத்தினார்.

மொத்தம் 1,472 நபர்கள் வீட்டு தனிமைப் படுத்தப்பட்டபின், இரண்டாவது சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளத்  தவறிவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 10 முதல் வெளிநாட்டிலிருந்து மலேசியா திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று அரசாங்கம் அறிவித்தபோது இரண்டாவது தன்னார்வத் சோதனை  தேவை எனவும்  மாற்றப்பட்டது.

புதிய மீட்பு நடைமுறையை மீறுபவர்களுக்கு தொற்று நோய்கள் தடுப்பு  கட்டுப்பாட்டுச்  சட்டம் 1988 (சட்டம் 342) இன் கீழ் தண்டனை வழங்கப்படும் என்று இஸ்மாயில் சப்ரி முன்பு கூறியிருந்தார், இதற்காக அவர்களுக்கு 1,000 வெள்ளி  அபராதம் விதிப்பு அல்லது நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படலாம்.

வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் குறித்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் அடிப்படையில், அனைவரும் அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்குவதாகக் கண்டறியப்பட்டது.  அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை என்பதும் தெரியவந்தது.

ஜூன் 10 முதல், மொத்தம் 8,535 நபர்கள் மலேசியாவுக்குத் திரும்பியுள்ளனர், அவர்களில் 8,498 பேர் கோவிட் -19 எதிர்மறைக்காக  வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டனர்.

நேர்மறை பரிசோதனை செய்த மீதமுள்ள 37 பேர் பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

மீட்பு நடைமுறை கட்டுப்பாட்டு ஆணை (ஆர்.எம்.சி.ஓ) தேவைகளை மீறியதற்காக மொத்தம் 71 நபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டதாக ஒரு தனி குறிப்பில் அமைச்சர் தெரிவித்தார்.

இவர்களில் 29 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டனர், மீதமுள்ள 42 பேருக்கு அபராதம், தண்டனை வழங்கப்பட்டன.

இவர்கள் கேளிக்கை பொழுதுபோக்கு இடங்களில் விதிகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்கள்..

போலிஸ் தலைமையிலான 16,615 அதிகாரிகள் இச்சோதனையை  மேற்கொண்டனர். சிறப்புப் பணிக்குழு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை இருப்பதாக இஸ்மாயில் சப்ரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here