தேசப்பற்றே முதன்மையானது

இந்திய சீன எல்லைத்தகராறு முற்றிக்கொண்டிருக்கிறது. சீன குடிமக்களே எல்லைத்தகராறு வேண்டாம் என்று சொந்த நாட்டுக்கே எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருக்கின்றனர். மக்கள் நல்லவர்களாகவும் நல்ல எண்ணமுடையவர்களாகவும் மனித நேயமுடையவர்களாகவும் இருக்குபோது சீன அரசாங்கம், ராணுவம் மட்டும் மனித நேயங்களைக் கடந்து மண்ணுக்கு ஆசைப்படுகின்றவர்களாக மாறிவருவது ஏன் என்றுதான் விளங்கவில்லை.

இந்திய, சீன எல்லைக்கோடுகளை மாற்றி, வரைபடம் காட்டுவதில் சீன் சிறந்த ஓவியர்களக இருக்கலாம். அதனால் கோடுகளை மாற்றி பூகோளம் வரைந்தால் ஓவியராகிவிட முடியாது. சீனாவின்  இடம் ஆக்கிரமிப்பு ஆசை உலக நாடுகளுக்கு நன்கு தெரிந்து விட்டது.

கொரோனாவை பரவவிட்டு வேடிக்கை பார்த்ததன் பின்னணியிலும் ஏதோ விபரீதம் இருக்கிறது என்று அமெரிக்காவும் சந்தேகிக்கிறது. அமெரிக்காவில் செயல்படும் சீன தொலைத்தொடர்பு, மின்னியல் நிறுவனங்கள் அமெரிக்காவை உளவு பார்ப்பதற்காகவே நடத்வதாகவும் அவற்றை மூடவும் அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.

சீனாவின்  இரட்டைவேடத்தனம்  இந்திய எல்லையில் வெடிகுண்டுபோல் வெடித்து உண்மையை கொட்டிவிட்டது.

இதனால், பாதிக்கபட்ட நாடாக நேப்பாளம் ஆகிவிட்டது. அதன் அதிபர் இப்பிரச்சினைகளால் நெஞ்சு வலிக்கு ஆளானார். பதிவி துறக்கவும் தயாராகிவிட்டார்.

இந்தியாவில் ஒருபகுதி நட்பு நிலமாக இருக்கும் நேப்பாள அரசு துரோகியாக மாறுவதால் சீனா இன்னும் கூடுதலாகவே பிடில் வாசிக்கும் என்பதைத்தான் காட்டுகிறது.

ஒருபக்கம் நண்பர்போல் பேச்சும், மறுபக்கம் எல்லை தாண்டுதலும் இருந்தால் எந்த கோணத்திலும் நண்பர்களாக இருக்கவே முடியாது.

கும்பிடும் கையில் கூர்வாள் ஏந்துகின்றவர்களாக, சீன ராணுவம் மாறிவருகிறது. அதன் எதிரொலியால் இணையச்செயலிகளான திக் தோக், ஹெலோ, லிக்கீ ஆகிய சீனச் செயலிகள் இந்தியாவில் முடக்கப்பட்டுவிட்டன.

ஆடு பகையும் குட்டி உறவும் என்பது சரியாக இருக்காது. செயலிகள் மூலம் பல ரகசியங்கள் பறிக்கப்படுவதாகவும் செய்தி இருக்கிறது.

இந்தியாவில் திக்தோக் மிகப்பிரபலம். இப்போது அது சுறுக்கிடப்பட்டுவிட்டது. இந்தியாவின் சொந்த செயலிக்கு மக்கள் மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது தேசப்பற்றாகக் கருதப்படுகிறது.

உண்மையான தேசப்பற்றாளர்கள் இதைத்தானே செய்வார்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here