கோலாலம்பூர்: புதிய மக்களவை சபாநாயகராக நியமிக்கப்படுவதற்கான வேட்பாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று காபுஹான் பார்ட்டி சரவாக் (ஜி.பி.எஸ்) நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார். பெயர் குறிப்பிடாமல், வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) அல்ல என்றும் வேட்பாளர் சரவாகியரா என்று கேட்டபோது அவர் சிரித்தார்.
நான் யாரையும் குறிப்பிடவில்லை. ஆனால் வேட்பாளர் நல்ல தகுதி வாய்ந்தவர் மற்றும் மலேசியர் என்பது நிச்சயம் என்று அவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) இங்கு 39 பேருக்கு நிறைவு ஒப்பந்த சான்றிதழ்களை வழங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28), டான் ஸ்ரீ முகமட் ஆரிஃப் எம்.டி யூசோஃப்பை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஒரு பிரேரணை கிடைத்ததை உறுதிப்படுத்தினார். மேலலும் துணைத் தலைவரான ஙா கோர் மிங்கையும் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஒரு தீர்மானமும் தனக்கு கிடைத்ததாக அவர் கூறினார். – பெர்னாமா