லோபாக் ஸ்ரீ சுப்பிரமணியர் பாலதண்டாயுதபாணி ஆலய திருப்பணிக்கு வெ.30 ஆயிரம் நன்கொடை வழங்கினார் அந்தோணி லோக்

சிரம்பான் மாநகரில் லோபாக் வரலாற்றுப்பூர்வமான ஒரு தொகுதி என்றும், அத்தொகுதி வாழ் இந்தியர்களின் வாழ்வாதார போராட்டத்திற்கு கைக்கொடுக்க நெகிரி மாநில பக்கத்தான் அரசாங்கம் தொடர்ந்து உதவி வரும் என சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோணி லோக் கூறினார்.

இத்தொகுதி வாழ் இந்தியர்களின் சமயம், கலை கலாச்சாரம் மற்றும் தாய்மொழியான தமிழ் ஆகியவை தொடர்ந்து பேனிக்காத்திட, இவ்வட்டரத்திலுள்ள ஆலயம் மற்றும் அதன் அருகாமையிலுள்ள லோபாக் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்கான நிதி உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதை முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக இங்கு லோபாக் ஸ்ரீ சுப்பிரமணியர் பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு, நெகிரி மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிங் சே யோங் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணா ஆகியோருடன் வருகை புரிந்த அவரை, ஆலயத் தலைவர் மணியரசு கருப்பையா தலைமையிலான நிர்வாகக்குழு வரவேற்றது.

தற்போது ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணி வேலைகளை நேரடியாக பார்வையிட்ட அவர், அத்திருப்பணிக்கான செலவை ஈடுக்கட்டும் நோக்கத்தில், அவரது நண்பர் மூலமாக திரட்டப்பட்ட வெ.30 ஆயிரத்துக்கான காசோலையை ஆலயத் தலைவரிடம் ஒப்படைத்தார்.

இதற்கு முன்னதாக இந்த ஆலயம் எதிர்நோக்கிய நில விவகார பிரச்சனைக்கு தீர்வுக்காணப்பட்டதை குறிப்பிட்ட அவர், ஏற்கனவே பக்கத்தான் ஹராப்பான் மத்திய அரசாங்கத்தின் வழி் நிதி உதவியும் பெறப்பட்டு வழங்கப்பட்டது அவர் குறிப்பிட்டார்.

மேலும் மாநில அரசாங்கத்தில் மாநில இஸ்லாமியர் அல்லாதவர் விவகாரத் துறை தலைவர் பதவியை ஏற்றுள்ள அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் மூலமாக, இம்மாநிலத்திலுள்ள இந்து, கிரிஸ்துவம், புத்தர் மற்றும் சீக்கியர் மதத்தினரின் வழிப்பாட்டுத் தலங்களுக்கு மாநில அரசு நிதி உதவி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

பக்கத்தான் அரசாங்க ஆட்சியில் நெகிரி மாநிலத்தில் துவங்கப்பட்ட இத்துறைக்கு ஆண்டுத்தோறும் மாநில அரசாங்கம் குறிப்பிட்ட பெரும் நிதியை ஒதுக்கி வந்துதுள்ள வேளையில், இவ்வாண்டு இத்துறைக்கு வெ. 1.7 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here