முஹிடின் தலைமைத்துவத்திற்கு ஒத்துழைப்பு

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமைத்துவத்தை  கபுங்கன் பார்ட்டி சரவாக் (ஜி.பி.எஸ்) தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும்  நாட்டிற்கு தொடர்ச்சியான பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஒரு நிலையான அரசாங்கம் தேவைப்படுகிறது என்றும் கருதுவதால் டான்ஶ்ரீ முஹிடின் நாட்டை வழிநடத்த அவரே பொருத்தமானவர் என்று ஜி.பி.எஸ் தலைவரும், சரவாக் முதல்வருமான டத்தோ பாத்திங்கி அபாங் ஜோஹாரி  கூறியுள்ளார். இதற்கு நாட்டின் கொரோனா காலத்தைச் சமாளித்த விததத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

தேவை நிலையான அரசாங்கம். அப்படியிருக்க, பிரதமர் பதவிக்கு ஏன் இத்தனை அவஸ்தை?  ஏற்கெனவே ஒரு பிரதமர் இருக்கிறார். மக்கள், தங்கள் தேவைகளில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு நிலையான அரசாங்கத்தையே விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.

இங்கிருந்து 560 கி.மீ வடக்கே பிந்துலுவில் உள்ள தஞ்சோங் கித்ரோங்கில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் மையத்திற்கு விஜயம் செய்த பின்னர் அபாங் ஜோஹாரி ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.

புதன்கிழமை புத்ராஜெயாவில் முஹிடின்  தலைமையிலான பெரிகாத்தான் கட்சிக்கு (பி.என்), ஜி.பி.எஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், பிரதமர் தலைமைக்கு ஜி.பி.எஸ் ஆதரவைத் தெரிவித்ததாக அபாங் ஜோஹாரி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பெசாகா பூமிபுத்தரா பெர்சாத்து கட்சியின் (பிபிபி) தலைவரான அபாங் ஜோஹாரி தவிர, கூட்டத்தில் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (எஸ்யூபிபி), பார்ட்டி ராக்யாட் சரவாக் (பிஆர்எஸ்), முற்போக்கு ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சரவாக்கின் ஆளும் ஜி.பி.எஸ் கூட்டணியில் ஒரு பகுதியாக உள்ளனர்.

பெர்சாத்து அம்னோ, பிஏஎஸ், எம்சிஏ, எம்ஐசி, பார்ட்டி பெர்சாத்து ராக்யாட் சபா (பிபிஆர்எஸ்), பார்ட்டி பெர்சாத்து சபா (பிபிஎஸ்), சபா மாநில சீர்திருத்தக் கட்சி (ஸ்டார்) ஆகிய கட்சித் தலைவர்களும் இரண்டு மணி நேர நீண்ட கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here