ஆடவருக்கு காயம் விளைவித்த இருவர் பிடிப்பட்டனர்

கடந்த ஜூலை 2ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் ஜாலான் ஹராப்பான் மேம்பாட்டுத் தளத்தில் ஆடவர் ஒருவரை வெறுமனே தாக்கி காயம் விளைவித்த இருவர் பிடிப்பட்டனர்.

தலைக் கவசம், நாற்காலி ஆகியவற்றை கொண்டு தாக்கியதில் பாதிக்கப்பட்ட ஆடவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்பில், கடந்த ஜூலை 3ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் 65 வயது நிரைந்த ஒருவரை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர் என்று ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.

அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் அதே நாளில் அதிகாலை 2.10 மணிக்கு சம்பந்தப்பட்ட மற்றொர் நபர் முத்தியாரா டாமான்சராவில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு 1 நாள் தடுப்பு காவலும் மற்றொர் நபருக்கு 3 நாள் தடுப்பு காவலும் விதிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்திற்கான காரணம் இன்னும் அறியப்படாத வேளையில் குற்றம் நிருபனமானால் சம்பந்தப்படவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்று நிக் எஸானி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here