கார் கண்ணாடியை உடைத்து திருடிய நபர் கைது

கடந்த ஜூலை 2ஆம் தேதி இரவு 10 மணியளவில் டாமான்சாராவில் கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்தனர் என்று பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.

அக்காரின் கண்ணாடியை தாம் உடைத்தாதாக அந்நபர் விசாரணையில் ஒப்புக் கொண்டார். அதோடு அவரும் அவருடைய தம்பியும் கடந்த ஜனவரி தொடங்கி இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால் அவருடைய தம்பி இன்னும் பிடிப்படவில்லை. குறிப்பாக டாமான்சாரா பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை இவர்கள் குறி வைத்து செயல்பட்டு வந்துள்ளனர்.

அதோடு, கார் கண்ணாடிகளை உடைத்து திருடிய பொருட்களை அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைப்பை, கைப்பேசி, சில்லரை காசுகள், கார் ரேடியோ செட், இச்சம்பவங்களுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல பொருட்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், 28 வய்தான அந்நபர் மீது அதிகமான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. எனவே மேல் விசாரணைக்காக அவர் 4 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நிக் எஸானி கூறினார்.

விலை உயர்ந்த பொருட்களை காரி வைக்காமல் கையோடு எடுத்துச் செல்லும் பழக்கத்தை பொதுமக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here