வீடு புகுந்து திருடிய ஆடவர் கைது

இங்குள்ள டாமான்சாரா டாமாய் லெஸ்தாரி அடுக்ககத்தில் கடந்த ஜூன் 5ஆம் தேதி காலை 8.15 மணியளவில் தமது வீட்டில் இரு திருடர்களை கண்டு குடும்ப மாது அலறியிருக்கிறார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு இருவரும் கம்பி நீட்டியுள்ளனர். இதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஒருவரை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீசார் கைது செய்துள்ளதாக ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.

திருடர்கள் இருவரும் அவ்வீட்டின் கண்ணாடிகளை உடைத்து அதன் வழி உள்ளே புகுந்து 600 வெள்ளி பெருமானமுள்ள விவேக கைப்பேசி ஒன்றை திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட ஒருவரை கடந்த ஜூலை 3ஆம் தேதி டத்தாரான் மெர்டேக்காவில் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 2 விவேக கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கார் திருட்டு, அடிதடி சம்பவங்களின் இந்த நபர் மீது ஏற்கெனவே புகார்கள் பதிவாகியுள்ளன.

மேல் விசாரணைக்காக அவர் 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மற்றொர் நபரை போலீசார் தேடி வருகின்றனர். தகவல் அறிந்தவர்கள் 03-79662176 என்ற எண்களில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைக்கு தொடர்புக் கொள்ளலாம் என நிக் எஸானி கேட்டு கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here