சுற்றுலாவை திறந்துவிட சபா தயார்

சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான கதவுகளை இந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் மீண்டும் திறக்க சபா அரசு இலக்கு வைத்துள்ளது என்று அதன் துணை முதல்வர் டத்தோ கிறிஸ்டினா லீவ்  தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய கோவிட் -19 தொற்றுநோயைக் கவனிப்பதன் மூலமும், சுகாதார அமைச்சின் ஆலோசனையினாலும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். நிலையான இயக்க முறைமைக்கு (எஸ்ஓபி) ஆதரவாகவும் இருக்கும் என்றார் அவர்.

சர்வதேசத் துறையை (சுற்றுலாப் பயணிகள்) மீண்டும் திறப்பதை எதிர்நோக்குகிறோம், ஆனால் மிகவும் தேர்வு செய்கின்றவர்களாகவும் இருப்போம் என்று  இங்குள்ள கயா தெருவில் உள்ள அப்பி-அப்பி இரவு உணவு சந்தைக்கு விஜயம் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாநில சுற்றுலா, கலாச்சார , சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் லீவ், தனது அமைச்சின் கீழ் உள்ள ஏஜென்சிகள், குறிப்பாக சபா சுற்றுலா வாரியம் (எஸ்.டி.பி) ஆகியவற்றுடன் இணைந்து இச்செய்தியைக் கூறியிருக்கிறார்.

கயா தெருவில் இரவு சந்தையை இயக்க அனுமதிப்பதன் மூலம் அரசாங்கம் தனது சுற்றுலாத் துறைக்கு புத்துணர்சி யூட்டியிருக்கிறார்.

மே 16 முதல் கினபாலு மலைசுற்றுலாவுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.  மேலும் சுமார் 2,000 ஏறுபவர்களின் வேட்கைக்கு இது பயனாக இருக்கும். பெரும்பாலும் உள்ளூர்க்காரர்களை ஈர்ர்க்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், சீனாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அனுமதிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்தும் இந்த விவகாரம் தொடர்பாகவும் அடுத்த வாரம் சீனத் தூதரகதில் ஒரு சந்திப்பு நடத்தப்படும் .

சீனாவின் அனைத்து பகுதிகளும் கோவிட் -19 ஆல் பாதிக்கப்படவில்லை என்றும், அந்தப் பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை எவ்வாறு விரைவுப்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் .

கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, சபா சுற்றுலா வாரியம் 3.766 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவுசெய்தது, இதில் சீனா அதிக பங்களிப்பை வழங்கியது என்று லீவ் செய்தியில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here