பதவிக்கும் பணத்திற்கும் கட்சி தாவும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்

சுங்கைபட்டாணி,

பதவிக்காகவும் பணத்திற்காகவும் கட்சியினை விட்டு கட்சி தாவும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இனி வருங்காலங்களில் மக்கள் நிராகரிக்க வேண்டும் என மக்கள் நீதி கட்சியினைச் சேர்ந்த கூலிம் பண்டார் பாரு தொகுதியின் உதவித் தலைவர் சிவகுரு சுப்பிரமணியம் மற்றும் அக்கட்சியினைச் சேர்ந்த பாடாங் செராய் தொகுதியின் இந்திய சமூகத்தின் சமூக,நல மற்றும் விவாகார பணியகத்தின் தலைவருமான விஜய்பிரேம் கேட்டுக் கொண்டனர்.

இங்குள்ள வசதி குறைந்த சில குடும்பத்தினருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியப் பின் கட்சியில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகள் குறித்து கருத்துரைத்தனர்.

மக்கள் ஒரு கட்சியின் மீது நம்பிக்கைக் கொண்டு அந்த அடிப்படையில் அதன் வேட்பாளர்களை ஆதரிக்கின்றனர்.

வெற்றி பெற்றப் பிறகு கோரப்படும் பணத்திற்கும் பதவிக்கும் கட்சியினை விட்டு கட்சித் தாவும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கைத் துரோகம் விளைவிப்பதாக அவர்கள் கருத்துரைத்தனர்.

இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட துரோகிகளுக்கு சட்டரீதியான கட்டொழுங்கு நடவடிக்கைகளை கட்சி மேற்கொள்ள வேண்டும்.

கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதியின் உறுப்பினர்கள் கட்சியின் சட்டதிட்டங்களை நன்கு அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். கட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவர்களின் தவறுகள் இருந்தால் சட்டவட்ட நடவடிக்கையினை எடுப்பதற்கு கட்சி தயக்கம் காட்டக்கூடாது என தங்களது கருத்தினை அவர்கள் ஒரு சேர தெரிவித்தனர்.

கு.அன்பரசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here