கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுகிறது என்று 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், உலக சுகாதார நிறுவனம் காற்றில் பரவாது என்று தெரிவித்து வருகிறது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தும்மும்போதும் இருமும்போது அவர்களிடம் இருந்து வெளியேறும் சிறிய நீர்த் திவலைகளில் இருந்து கொரோனா வைரஸ் பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் காற்றின் மூலமும் வைரஸ் பரவும் என்று 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை நிரூபிக்கும் வகையில் அடுத்த வாரம், இவர்கள் தங்களது ஆய்வை அறிவியல் இதழில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.









