சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான குடியிருப்பு பகுதியில் காடுகள் மண்டி மலைப் பாம்புகள் குடியேறியும், ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி பெருக்க இடமாகவும் உருமாறி இங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு பெரும் மிரட்டலாய் இருந்து வருவதாக கிருஷ்ணன் சிம்மாசலம் (வயது 59) கூறினார்.
தாமானை சுற்றிலும் உயரமான மரங்களுடன் அடர்த்திய காடுகள் சூழ்ந்துள்ளது. எந்நேரத்திலும் மரங்கள் அதன் அருகிலுள்ள வீடுகள் மீது சரிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் இங்குள்ள மின்சார கம்பிகள் முழுவதும் மரம் செடி கொடிகள் சூழ்ந்துள்ள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின்சார கம்பங்களின் மேல் பகுதியிலிருந்து கீழ் பகுதி வரையில் அவை சூழ்ந்திருப்பதால், அங்கு விளையாடும் குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்து தாக்கிவிடுமோ என ஒவ்வொரு நாளும் இங்குள்ள குடியிருப்பாளர்கள் பயத்தால் நடுங்குகிறார்கள் என்றும் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இங்குள்ள கால்வாய்கள் வசதிகளும் முறையாக அமைக்கப்படவில்லை என்றும் கூறிய அவர், இதன் முதன்மை கால்வாய்கள் சில இடிந்தும் சரிந்தும் கிடக்கின்றன. இதனால் கழிவு நீர் தேக்கங்கள் ஏற்பட்டு, இப்பகுதி் முழுவதும் தூற்நாற்றம் வீசுகிறது. இதனால் இங்குள்ள மக்கள் அசௌகரியமான சூழலில் சிக்கி தவிக்கிறார்கள்.
மேலும் அந்நீர் தாக்கத்தால் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியும் பெருகி, பலர் டிங்கி காய்ச்சலின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார்கள். அதுமட்டுமல்ல பழுதாகி நிலையில் சில வாகனங்களும் இங்கு குப்பையாகி இயற்கை சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்றும் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
மேலும் வெளியிலிருந்து இங்கு வரும் சில தரப்பினர் குறிப்பாக இரவு நேரங்களில் இங்குள்ள விளையாட்டு திடல்களில் கூட்டம் கூட்டமாக அமரந்துக்கொண்டு் மது பானங்களை அருந்திக்கொண்டு, அதன் காலியான போட்டல்களை உடைத்து கண்ட கண்ட இடங்களில் வீசி வீடுகிறார்கள். இதுவொரு பொறுப்பற்ற செயல் என அவர்களை சாடிய அவர், காலை வேளைகளில் இங்கு உடற்பயிற்சி மேற்கொள்ள வருபவர்களை, அப்போட்டல் கண்ணாடி தூண்டுகள் பதமாக்கி விடுகிறது என்றும் குறிப்பிட்டார்.
அதிகமான எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழும் இக்குடியிருப்பின் அவல நிலையை, எழுத்துப்பூர்வ மனுவாக ஏற்கனவே பலமுறை இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சிரம்பான் மாநகர மன்றம் ஆகிய தரப்பிடம் வழங்கியிருந்தோம். ஆனால் அதற்கான தீர்வில் நாங்கள் ஏமாற்றம் மட்டுமே அடைந்தோம் என வருத்தத்துடன் கூறினார்.
– நாகேந்திரன் வேலாயுதம்