இளைஞர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் மின்னியல் விளையாட்டுத் துறை

இ-ஸ்போர்ட்ஸ் எனும் மின்னியல் விளையாட்டுத் துறையில் ஈடுப்பட இந்திய இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என இங்கு நீலாய் தி பென்தோன் மெகா மோலில் இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு பயிற்சி மையத்திற்கு வருகைப்புரிந்த நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன் அவ்வாறு கூறினார்.

அணைத்துலக நிலையில் விளையாட்டு நடவடிக்கைகள் மிளிரச் செய்த காலம் போக, இன்று உள்ளரங்கு விளையாட்டுகளும் அதே பட்டியலில் இடம் பெற தொடங்கிவிட்டன என நெகிரி மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் தொழில் நுட்பம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு வரும் இன்றைய காலக்கட்டத்தில், மின்னியல் விளையாட்டுகள் எதிர்காலத்தில் உலகை ஆக்கிரமிக்கும் என்றால் அது மிகையாகாது என்கிறார் அருள்குமார். மின்னியல் சம்பதப்பட்ட விளையாட்டு போட்டிகள், எதிர்வரும் மலேசிய தேசிய விளையாட்டு போட்டியான சுகமாவில் இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

எனவே இளைஞர்கள் குறிப்பாக இந்திய இளைஞர்கள் இத்துறையில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்ட வேளையில், அதனை பயன்படுத்திக்கொள்ள நம் சமுக இளைஞர்கள் முந்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்றையக் காலக்கட்டத்தில் வழி தவறிச் செல்லும் இளைஞர்களை நல்வழிப்படுத்த இத்துறை முக்கிய பங்காற்ற முடியும் என நெகிரி மாநில அரசாங்கம் நம்புவதாகவும், அத்துறைக்கான அனைத்து வசதிகளுடனான தேவைகளை நிறைவேற்றி தருவதற்கு மாநில அரசு தரப்பு தயாராகவுள்ளது என்றும் மாநில மனிதவம், தோட்டப்புறம் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர் விவகார நடவடிக்கைத் துறை தலைவர் அருள்குமார் மேலும் குறிப்பிட்டார்.

இந்தி இ-ஸ்போர்ட்ஸ் மின்னியல் விளையாட்டு துறையின் வளர்ச்சி இளைஞர்களுக்கான பல வேலை வாய்ப்புகளையும் இதன்வழி உருவாக்கி தருவதோடு, இத்துறைக்கான முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரும் என்றும் அவர் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்தார்.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here