கும்மாளமடிக்கும் கோவிட்

இவ்வாண்டு மார்ச் 18 ஆம்நாள்  அமல்படுத்தப்பட்ட எம்.சி.ஓவின் 115 ஆவது நாளைக்கடந்திருக்கிறதது. இக்காலக்கட்டத்தில் மலேசியா உலக அளவில் பேச்சப்படுகின்ற ஒரு நாடாவும் மாறியிருக்கிறது என்றால், மக்கள் மிகத்தெளிவான, முன்னோக்குச் சிந்தனையுள்ளவர்களாக இருப்பதும், அதே வேளை  மக்களை வழி நடத்துகின்றவர்கள் தூர நோக்குச்சிந்தனையுடன் செயல்படுவதும் காரணங்களாக இருக்கின்றன.

இவ்வேளையில்  கோவிட் -19 நாட்டில் பரவுவதைத் தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட மீட்பு இயக்கம் கட்டுப்பாட்டு ஆணையின் (ஆர்.எம்.சி.ஓ) 30 வது நாளைக் கடந்திருக்கிறது.

தொடர்ச்சியான இரண்டாவது நாளான கடந்த 24 மணி நேரத்தில்  கோவிட் பதிவு சுழியம் விழுக்காடாக இருப்பதில், கோவிட் எதிர்ப்பில், முறையான நடப்பு கட்டுப்பாட்டு இயக்கம் சரியான பாதையில் செல்கிறது என்பதை நிச்சயம் உறுதி செய்யலாம்.  மரணங்களும் இல்லை என்பதும் ஒரு சிறந்த காரணம்.

இதே காலகட்டத்தில் புதிய இறப்புகளும் பதிவு செய்யப்படவில்லை, மேலும் தொற்றுநோயால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 24 நாட்களுக்கு 121 ஆகவே உள்ளது.

இருப்பினும், கோவிட் -19 க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, கோவிட் -19 பரவுவதற்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் மலேசியர்கள் எச்சரிக்கையாகவும், சீராகவும் இருப்பது முக்கியம் என்று டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகிறார்.

உலகத்தின் 196 நாடுகளில் கோவிட் தொற்று கும்மாளம் போட்டிக்கொண்டிருக்கிறது. சில நாடுகளே அதிலிருந்து மீட்சியைப் பதிவு செய்திருக்கின்றன. ஆனாலும் இன்னும் கருமேகம் கலையாமலேயே இருக்கிறது.

இருப்பினும், தடுப்பு முயற்சிகளில் புதிய வாழ்வியலுக்கு மாறவேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகியிருக்கின்றனர். சில மாதங்களிலேயே இம்மாற்றத்தை ஏற்றுக்கொண்டு வாழும் பக்குவத்திற்கு மக்கள் தங்களைத்தயார் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்புக்கு முதலிடம் கொடுக்கும் பரிந்திரைகளை அனுசரிப்பதே சரி என்று எடுத்த தீர்மானமே கோவிட்- 19 விடுபாட்டிற்கு மூலமாக இருக்கிறது.

கையில் கத்தியின்றி யுத்தம் செய்ய முடியம் என்று கோவிட் உணர்த்தியிருக்கிறது. அதற்காக கிருமிகளை ஆயுதமாக தீவிரவாதிகள் பரவிட்டிருக்கின்றனர். அதே  பாணியில் தொற்றை தூர வைக்கமுடியும் என்று மக்களும் உணர்த்தியிருக்கின்றனர்.

சோதனையான காலத்தில் ஒற்றுமையாக இருப்பது எப்படி என்பதை மக்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

உலகத்தின் பார்வையில் மலேசியா சிறிய நாடு. கோவிட் எதிர்ப்பை சிறப்பாக கையாண்டிருக்கிறது. மேலை நாடுகளே இன்னும் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. இனப்பாகுபாடுகள் ஒருபோதும் வெற்றிதராது என்பதற்கு அமெரிக்கா ஒரு சான்றாக இருக்கிறது.

மனித குலத்திற்கே சவால் விடும் தொற்றை அழிக்க முற்படும் சோதனையான காலத்தில் மனிதனே மனிதனை அழிக்கும் கொள்கையால் கோவிட் கூடுதலாகி வருகிறது என்பது ஒருபாடம். இந்தப்பாடம் மலேசியர்களுக்குத் தேவைப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here