சன்வே, செல்கோம், ஹூவாவெய் முயற்சியில் 5ஜி ஒளி கற்று மேம்படுத்தப்படும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10-

பிரபல நிறுவனங்களான சன்வே பெர்ஹாட், செல்கோம், ஹூவாவெய் ஆகியவை இணைந்து 5ஜி ஒளி கற்றை மேம்படுத்தும் பணியில் இறங்கியுள்ளன.

இணையத்தின் வேகத்தை மேம்படுத்தும் ஒரு அங்கமாக 5ஜி நெட்வர்க்கின் ஒளி கற்றை இந்நிறுவனங்கள் மேம்படுத்துகின்றன.

இந்த மூன்று நிறுவனங்கள் இணைந்து நேற்று காலை உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டன.

இணையத்தின் மூலம் மக்கள் தங்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ள இந்நிறுவனங்கள் ஒன்றிணைந்து நெட்வர்க்கை மேம்படுத்துகின்றன.

நாட்டின் இணையத் தன்மையை மேம்படுத்துவதோடு சமூக அமைதி, இணைய மூலமான சுகாதாரம், இணையக் கல்வி, மருத்துவமனை உள்ளிட்ட பல் சேவைகளை மேம்படுத்திக் கொடுக்கும் ஒரு தளத்தை இந்நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.

நாட்டின் இணைய செயல் தன்மையையும் மேம்படுத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. கோலாலம்பூர் சன்வே சிட்டியின் பயனீட்டாளர்கள் பயனடை தொழில் புரட்சி 4.0வுக்கு ஏற்ப ஒளி கற்று விவேகப்படுத்தப்படவுள்ளது.

நாட்டின் முன்னணி இணைய நெட்வர்க்குகளில் ஒன்றான செல்கோம் மற்றும் ஹூவாவெய் சிறந்த தொழில்நுட்ப கருவி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. 5ஜி நெட்வர்க் மேம்பாட்டில் இவ்விரு நிறுவனங்களின் பங்கு அளப்பரியது என்று சன்வே குழுமத்தின் தலைவர் டத்தோ சியூ சி கின் கூறினார்.

வேலை, விளையாட்டு, கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து அம்சமும் நிறைந்த தளமாக சன்வே சிட்டி அமைகிறது. அதிலும் பல தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் சன்வே சிட்டி செயல்படுவது வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவை தரும் என்றும அவர் கூறினார்.

இணையம் தொடர்பான தகவல் பரிமாற்றம் உட்பட அவற்றை மக்களிடம் கொண்டுச் சேர்க்கும் ஒரு தளமாக சன்வே சிட்டி அமைகிறது என்று செல்கோம் அக்ஸியாத்தா பெர்ஹாட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி இடாம் நவாவி கூறினார்.

நாட்டின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் மக்களுக்கு நிறைவான இணைய சேவையை வழங்கவும் செல்கோம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல புத்தாக்க முயற்சிகளின் மூலம் நிறைவான சேவையை வழங்க செல்கோம் முனைப்பு காட்டி வருகிறது.

4ஜி நெட்வர்க்கின் மூலம் நாடு முழுவதும் 93 விழுக்காடு ஒளி கற்றை செல்கோம் கொண்டுள்ளது. அதோடு 4ஜி எல்டிஇ-எ ரக 4ஜி நெட்வர்க்கின் 83 விழுக்காடு ஒளி கற்றையும் கொண்டுள்ளது. தலைநகர் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிவேக தொழில்நுட்பத்தை செல்கோம் வழங்குகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு 5ஜி நெட்வர்க்கின் முத சோதனை செய்யப்பட்டது. செல்கோமின் தொடர் முயற்சியில் 4ஜி எல்டிஇ-எ ரக ஒளி கற்றின் 2,200 தளங்கள் 5ஜி நெட்வர்க்கிற்கு மாற்ற தயார் நிலையில் உள்ளன என்றும் இடாம் கூறினார்.

உலக நாடுகள் தொழில்நுட்பத்தின் அதிவேக மேம்பாடுகளை நோக்கி பயணித்து வருகின்றனர். மலேசியாவில் இவ்வாறு தொழில்நுட்ப வளர்ச்சியின் நோக்கம் அறிந்த சன்வே சிட்டி எங்களுடன் கைக்கோர்த்து செயல்படுவது வரவேற்கக் கூடியது என்று ஹூவாவெய் மலேசியாவின் தலைமை செயல் அதிகாரி மைக்கல் யுவான் கூறினார்.

அதிவேக இணைய சேவை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். நாட்டின் மேம்பாடும், பயனீட்டாளர்களின் மன நிறைவும் இதில் அடங்கியுள்ளன. பெரும் சவாலாக விளங்கும் இந்த மேம்பாட்டினை புத்தாக்க முயற்சியில் நிரூபித்துக் காட்டுவோம் என அவர் கூறினார்.

ஆர்.பார்த்திபன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here