தண்ணீர் தேசமே மண்ணின் வாசம்!

நாட்டின் நீர் வழங்கல் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சிகளில், மாநிலங்களுக்கிடையில் தண்ணீர்  பகிர்வு குறித்து சுற்றுச்சூழல் , நீர் அமைச்சகம் (காசா) விவாதித்து வருகிறது என்று அதன் அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.

அதிகப்படியான விநியோகம் உள்ள மாநிலங்களுக்கும், நீர் பற்றாக்குறையை அனுபவிக்கும் மாநிலங்களுக்கும் இடையே திட்டமிடப்பட்டுள்ள தண்ணீர்ப் பகிர்வு, இரு தரப்புக்கும்  பயனளிக்க வேண்டும். மேலும் நீர் பற்றாக்குறைக்குத் தீர்வாகவும் இருக்க வேண்டும் என்றார் அவர்.

உபரி நீர் வழங்கல் உள்ள மாநிலங்களில் திரெங்கானு, பகாங், பேராக் , கெடா ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் நீர் பற்றாக்குறையை அனுபவிக்கும் மாநிலமாக  மலாக்கா இருந்துவருகிறது.

அதிகப்படியான நீர்வளம் உள்ள மாநிலங்கள், கடலடி தண்ணீர் பயன்பாட்டு முறைக்கு  தயாராக,  பின்பற்றக்கூடிய வழிமுறைகள் குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக அவர்  ஒரு கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜூன் 30ஆம் தேதி மலேசியாவின் தன்னார்வ தொண்டு நிறுவனமான பெர்த்துபோஹான் பெலிண்டுங் கசானா ஆலம் (பெக்கா) வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் இன்னும் தீவிரமான நடவடிக்கை எடுக்காவிட்டால், அல்லது அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் நாடு கடுமையான நீர் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என்று கூறினார். அதோடு சுற்றுச்சூழலைப்  பாதுகாப்பதிலும் ஈடுபாடு காட்டப்படவேண்டும் என்றார் அவர்.

மலாக்கா முதல்வர் டத்தோ சுலைமான் எம்.டி அலி , காசா பொதுச்செயலாளர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜெய்னி உஜாங் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், நீண்ட காலத்திற்கு நீர் வழங்கல் பிரச்சினையை தீர்க்க, மாநிலத்தில் TAPS Jernih மற்றும் TAPS Malacca ஆகிய இரண்டு உயர் திட்டங்களும் உருவாக்கப்படும் என்றார். அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here