ஆயர் ஈத்தாம், பந்தர் பாரு ஃபார்லிம் என்ற இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் தனது எட்டு வயது மகனை சுத்தியலால் அடிக்க முயன்ற காட்சி வீடியோவில் பதிவானதின் தொடர்பில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திமூர் லாவுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி சோபியான் சாண்டோங் இச்சமபவம் குறித்து கூறுகையில், அவரது 37 வயது மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து 42 வயதான சந்தேக நபர் இரவு 9 மணியளவில் ஆயர் ஈத்தாம் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
அந்த நபருடன் இருந்த சிறுவனை காவல்துறையினரும் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்த விவரங்கள் லிப்டில் உள்ள கண்காணிப்பு கேமராவின் (சி.சி.டி.வி) கிடைத்ததை அடுத்து அந்த பெண் போலீஸ் அறிக்கையைப் பதிவு செய்தார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட மூன்று முந்தைய பதிவுகளை வைத்திருந்த சந்தேக நபர், கைது செய்யப்படும்போது போதைப்பொருளுக்கெதிரான சோதனைக்கு உட்பட்டார்.